/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
கொரிய தமிழ்ச்சங்கம்- சுங்க்புக் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
கொரிய தமிழ்ச்சங்கம்- சுங்க்புக் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொரிய தமிழ்ச்சங்கம்- சுங்க்புக் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொரிய தமிழ்ச்சங்கம்- சுங்க்புக் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தம்
நவ 04, 2024

கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, தென்கொரியா, ஓசோங்- சுங்க்சாங் உயிரியல் வணிகத் தேசியப் பல்கலைக் கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் குத்துவிளக்கு ஏற்றியும், சங்கத்தின் கலைக்குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியும் நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கொரிய தமிழ்ச்சங்கத்திற்கும், சுங்க்புக் உயிரியல் தொழிற்துறை- பல்கலைக்கழக ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (Chunkbuk bio industry- university cooperation institute) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வர்த்தக வாய்ப்பு, உயிரியல் ஆராய்ச்சி மேம்பாடு, அறிவியல் தொழில் நுட்பத் தகவல் பரிமாற்றம் மற்றும் 2025- ஆம் ஆண்டில் உலகத் தமிழ்க் கருத்தரங்கிற்கான முன்னேற்பாடு போன்றவைகள் ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சங்கள் ஆகும். ஒப்பந்தத்தில், இரு அமைப்பின் தலைவர்கள் முறையே முனைவர் அரவிந்தராஜா மற்றும் ஜாங்கிலீ கையெழுத்திட்டனர்.
அரசுப் பிரதிநிதி கிம்ஹாங்சுக், சங்கத்தின் புரவலர் ஜேஹெயோங்ரூ, சங்கத்தின் மூத்த உறுப்பினர் பாலகிருஷ்ணன் துரைராஜ், அவரது துணைவியார், சங்கத்தின் ஆளுமைக் குழுவினர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் இடையே அறிவு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் இவ்வொப்பந்தம் உறுதுணையாக இருக்கும், என சங்க ஆளுமைக் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- தினமலர் வாசகர் அரவிந்த ராஜா
Advertisement