/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
ஹாங்காங் பார்வையாளர்களை மகிழ்வித்த வசீகரிக்கும் இந்திய கலாச்சார களியாட்டம்
/
ஹாங்காங் பார்வையாளர்களை மகிழ்வித்த வசீகரிக்கும் இந்திய கலாச்சார களியாட்டம்
ஹாங்காங் பார்வையாளர்களை மகிழ்வித்த வசீகரிக்கும் இந்திய கலாச்சார களியாட்டம்
ஹாங்காங் பார்வையாளர்களை மகிழ்வித்த வசீகரிக்கும் இந்திய கலாச்சார களியாட்டம்
நவ 01, 2024

ஹாங்காங்கில் உள்ள Xiqu மையத்தில் உள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழாவில், போர்கீத் பாடலின் மயக்கும் மெல்லிசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. எகிப்து, ஜிம்பாப்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கான்சல் ஜெனரல்கள் உட்பட சிறப்பு விருந்தினர்களின் பாராட்டைப் பெற்ற ஹாங்காங் மற்றும் மக்காவ் SAR களில் உள்ள இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
பல்வேறு இந்திய அமைப்புகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய பார்வையாளர்களுக்கு, இந்திய மரபுகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையை எடுத்துரைக்கும் வகையில் இந்த வசீகரமான கலை விருந்து அளிக்கப்பட்டது. கான்சல் ஜெனரல் சத்வந்த் கனாலியாவின் தீபாவளி வாழ்த்துக்களுடன் நிகழ்வு தொடங்கியது. இந்திய பாரம்பரியங்களை ஹாங்காங் மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வை ஈஷானி சாண்டில்யா சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
கிருஷ்ணர் மற்றும் கோபிகா ஸ்திரீகள் மீதான ஆத்மார்த்தமான 'கோபினி பிரானா' பாடலை, பரதநாட்டியம் மற்றும் சத்திரிய நடனத்தில் திறமை பெற்ற டாக்டர் மோனிஷா தேவி கோஸ்வாமி பாடி பார்வையாளர்களைச் சொக்க வைத்தார். கிருஷ்ணரின் குழந்தைப் பருவ விளையாட்டுத்தனங்களை அவர் அழகாக தனது முக பாவத்தால் அழகாக சித்தரித்தார். அடுத்து ரேஷ்மி பதியாத், 'சொல்லுகெட்டு' என்ற பிரமிக்க வைக்கும் மோகினியாட்டம் நடனம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார்.
டாக்டர். கோஸ்வாமியின் சத்ரிய நடனத்தில் வெளிப்படுத்திய ஒன்பது வகை உணர்வு பாவனைகளும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருந்தது. பார்வதிதேவியாகத் தோன்றி நடனம் ஆடிய ரேஷ்மா, மகிஷாசுர வதக் காட்சியில், சிறப்பான அபிநயம் மூலம் தனது வித்தியாசமான கலைத்திறனை வெளிப்படுத்தினார்.
கலாசார பரிமாற்றத்தின் மூலம் பரஸ்பர பாராட்டு பெற்ற கலைஞர்களை கான்சல் ஜெனரல் கவுரவித்தார். இந்தியாவின் இந்த செழுமையான கலாச்சாரம் கொண்டாட்டம், ஹாங்காங்வாசிகளின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தது.
இந்த கலாசார களியாட்டத்திற்கு முந்தைய நாள், போர்கீத், சத்திரிய மற்றும் மோகினியாட்டம் நடனங்களின் நுணுக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பயிலரங்கம் கலைஞர்களால் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் உள்ளூர் சீன குடிமக்கள் மற்றும் ஹாங்காங் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் டாக்டர் மெய். சித்ரா
Advertisement