/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்து - சிலோமில் சிவராத்திரி கொண்டாட்டங்கள்
/
தாய்லாந்து - சிலோமில் சிவராத்திரி கொண்டாட்டங்கள்
மார் 02, 2025

பேங்காக் என்ற பெயரைச் சொன்னாலே, பேரிரைச்சைல்களுடன் கூடிய இரவு விடுதிகளில், இசையுடன், மது மழையில் நனையும் இராத்திரிகளே என்று மனிதர்களின் மூளையில் மத்தாப்பு போல மின்னலடிக்கும் இந்த நாகரீக காலத்தில், அந்த எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும், ஒரே இரவில் யாகங்கள் வளர்த்து, வேள்விகள் செய்யும் வேட்கையில், சிவபெருமானின் நான்கு கால அபிஷேக மழையில், ஓதுவாரின் பாசுரங்கள் ஓங்கி ஒலித்து, ஓட்டமெடுக்க வைத்து, மொத்த நகரத்தையும் தன் இதயத்தால் சுத்தம் செய்து, நேர்மறை ஆற்றலாக மாற்றும் ஒரு ராத்திரி என்றால் அது தான் சிவன்ராத்திரி.
சிலோம் ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் ஆலய சிவராத்திரியில், இரவு முழுவதும் நடைபெற்ற பூஜைகளில், உள்ளூர் தாய்மக்கள், தாய்லாந்து வாழ் தமிழ் மக்கள், மற்றும் ஸ்ரீலங்கா, மியான்மர் உட்பட பல நாட்டினர் இரவு முழுவதும் கண்விழித்து கலந்து கொண்டது, ஈசன் மேல் கொண்ட பற்றை பறைசாற்றுவதாக அமைந்தது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement