sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

பானை ஓவியத்தில் அசத்தும் சந்தோஷ் கோபால்

/

பானை ஓவியத்தில் அசத்தும் சந்தோஷ் கோபால்

பானை ஓவியத்தில் அசத்தும் சந்தோஷ் கோபால்

பானை ஓவியத்தில் அசத்தும் சந்தோஷ் கோபால்


PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம் பகுதியில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில், சித்தர் மயாண்டியின் கனவு வழியாக உருவான புண்ணிய தலம். இது பக்தர்களுக்கு அமைதி, நம்பிக்கை மற்றும் அன்பை வழங்கும் திருத்தலமாக விளங்குகிறது.

இந்தக் கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் சிறப்பானது.Image 1456571நாளை (16.08.2025) நடைபெறவுள்ள கிருஷ்ண ஜெயந்தி விழாவில், பக்தர்களுக்கு சிறிய, நடுத்தர மற்றும் பெரிய பானைகளில் இனிப்புகள் நிரப்பி பிரசாதமாக வழங்குவர். அந்த பானைகளை வெறும் பானைகளாக அல்லாமல், அதில் அழகான கிருஷ்ணர் ஓவியங்களையும் வரைந்து தருவார்கள்.Image 1456572இந்த பானைகளில் வரையப்படும் கிருஷ்ணரின் ஓவியங்கள் மிக நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் இருக்கும் என்பதால், பல பக்தர்கள் பிரசாத பானையை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வர்.

இந்த அற்புத ஓவியங்களை வரைந்து தருபவர் சந்தோஷ் கோபால். இவரது பூர்வீகம் கேரளா; தற்போது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் வசிக்கிறார்.Image 1456573சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் ஓவியப் பயிற்சியும் பெற்றார். ஆனால் தனது வாழ்க்கைப் பாதையை சினிமா இயக்கம் நோக்கி திருப்பி, அதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

'கற்ற கலையை விட்டுவிடக் கூடாது' என்ற எண்ணத்தால், சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில், வருமானத்திற்காக அல்லாது, மனநிறைவுக்காகவே ஓவியங்களை வரைந்து வருகிறார்.Image 1456574இதுவரை ஆயிரக்கணக்கான பானை ஓவியங்களை வரைந்துள்ளதோடு, கிருஷ்ணர் மட்டுமின்றி முருகன்,விநாயகர்,ராமர் உட்பட பல தெய்வங்களின் படங்களையும் வரைந்துள்ளார்.Image 1456575'பக்தர்கள் இந்தப் பானைகளை புனிதமாக போற்றி பாதுகாத்து வருவதைக் காணும் சந்தோஷத்திற்காகவே, இந்தக் கோவிலுக்குத் தேவையான பானை ஓவியங்களை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்' என சந்தோஷ் கோபால் கூறினார்.

தொலைபேசி: 98941 38045படங்கள்: செந்தில் விநாயகம்- எல். முருகராஜ்






      Dinamalar
      Follow us