sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

தலைவலிக்கும் மூளையில் கட்டிக்கும் தொடர்பு இருக்கிறதா?

/

தலைவலிக்கும் மூளையில் கட்டிக்கும் தொடர்பு இருக்கிறதா?

தலைவலிக்கும் மூளையில் கட்டிக்கும் தொடர்பு இருக்கிறதா?

தலைவலிக்கும் மூளையில் கட்டிக்கும் தொடர்பு இருக்கிறதா?


PUBLISHED ON : செப் 14, 2025

Google News

PUBLISHED ON : செப் 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அடிக்கடி ஏற்படும் தலைவலியை அலட்சியம் செய்யக்கூடாது,'' என்கிறார் நரம்பியல் நிபுணர் டாக்டர் ராஜேஷ்பாபு.

பக்கவாதம் (Stroke) ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன?

உடலில் பிளட் பிரஷர் சீராக இருக்க வேண்டும். பிளட் பிரஷர் அதிகமானால், மூளையில் உள்ள ரத்த குழாய்கள் வெடித்து விடும். பிளட் பிரஷர் இருப்பவர்கள், கட்டாயம் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை கட்டாயம் நிறுத்தக்கூடாது.

இதய நாளங்களில் பிரச்னை ஏற்படும் சிலருக்கு, ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுவதாலும், ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாலும், பக்கவாதம் ஏற்படலாம். வாய் ஒரு பக்கம் இழுத்தது போன்று, முக அமைப்பில் மாற்றம், சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தலைவலிக்கும், மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் சம்மந்தம் உண்டா... மூளை கட்டி (Brain Tumour) அறிகுறிகள் என்னென்ன?

மூளைகட்டி இருப்பின் ஆரம்பநிலையில், தலைவலி தொடர்ந்து இருக்கும். அனைத்து தலைவலியும் கட்டி இருப்பதால்தான் என கூற முடியாது. தலைவலி, அதிக வாந்தி, பார்வை குறைவது, காது சரியாக கேட்காமல் போவது, ஒரு பக்க கை, கால்கள் வராமல் போவது இதன் அறிகுறிகள். அறிகுறிகள் இருந்தாலே சி.டி. ஸ்கேன் எடுத்து பரிசோதித்துக்கொள்வதும், உடனடியாக சிகிச்சை துவக்குவதும் அவசியம்.

நரம்பு கோளாறுகள், குழந்தைகளில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது?

குழந்தைகளை பொறுத்த வரை, நரம்பு சிக்கலால் ஏற்படுவது வலிப்பு பாதிப்பு. காய்ச்சல் அதிகமாக இருந்தால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு ஏற்படும். வலிப்பு ஒரு முறை ஏற்பட்டால், டாக்டர் பரிந்துரையின்படி மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு, நரம்பியல்பிரச்னைகளை சரியாக்குமா?

உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்பது அனைத்து வகையான நோய்களும் வராமல் தடுக்கும் ஒரு முக்கிய வழிமுறை. சரியான உடற்பயிற்சி, உணவு பழக்கம் இல்லை எனில், சிறு வயதிலேயே உடல்பருமன், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணை நோய்கள் ஏற்பட்டு, அதன் வாயிலாக நரம்பு பிரச்னைகளும் கட்டாயம் ஏற்படும்.

டிஜிட்டல் வாழ்க்கை (மொபைல், லேப்டாப்,) நரம்புகளை பாதிக்குமா?

டிஜிட்டல் பயன்பாடு அதிகம் இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் அதிகம் இருக்கும். துாக்கமின்மை, மனஅழுத்தம் காரணமாக, அனைத்து நோய்களும் வருவது இயல்புதான்.ஆகவே, ஒவ்வொருவரும் ஸ்கிரீன் பார்க்கும் நேரத்தை முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது.

'வலிப்பு வந்தால் கையில் இரும்பு கொடுப்பது தவறு'

''சினிமாவில் காண்பிப்பது போல் இரும்பு கம்பி, சாவியை கையில் கொடுப்பது தவறு. கை இழுத்துக் கொள்ளும்போது, அவற்றால் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

முதலில், நெருப்பு, நீச்சல் குளம், மின்சாரம் போன்ற அபாயகரமான இடங்களில் இருந்து, அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சுயநினைவு இழப்பதால், எச்சில் விழுங்க முடியாமல் வாயில் நுரையாக வருகிறது. அதை துடைத்துவிட வேண்டும். கை, கால்களை பிடித்து அழுத்துவதோ கூடாது.

நாக்கை கடிக்கின்றனர் என, வாயில் எதையும் வைத்து திணிக்கக் கூடாது. ஒரு புறம் சாய்ந்து படுக்க வைக்கலாம். இரண்டு நிமிடத்தில் சரியாகி விடும்; உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதே சரியான தீர்வு,''

டாக்டர் ராஜேஷ்பாபு

93600 30094


svrbmch@gmail.com






      Dinamalar
      Follow us