PUBLISHED ON : அக் 25, 2026

ஆ ரோக்கியமான சருமம் உடைய அனைவரும், ‘ஹைட்ராபேஷியல்’ சிகிச்சையை செய்து கொள்ளலாம். இது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை நீர்ச்சத்துடன் வைக்க செய்யப்படும் நவீன மருத்துவ சிகிச்சை முறை.
சருமத்தை பொலிவுடன் வைக்க, சில வகை காய்கறிகள் அல்லது பழங்களின் சத்துக்கள், தாதுக்களை தோலின் உட் புறத்தில் செலுத்துவோம்.
தோலின் வெளிப்புறத்தில, குறிப்பாக, முகத்தில் ஏற்படும் மரு, இயல்பைவிட அடர் நிறத்தில் தோல் மாறுவது, பொலிவிழந்த சருமம் ஆகியவற்றிற்கு ஹைட்ராபேஷியல் செய்யப்படுகிறது. முகப்பரு, தோலில் ஏற்படும் மெல்லிய சுருக்கங்கள், முதுமையான தோற்றத்தை மாற்றுவது ஆகியவற்றிற்கு இச்சிகிச்சை பலன் தராது.
அழகு நிலையங்களில் குறைந்த செலவில் செய்யப்படும் ஹைட்ராபேஷியல் சிகிச்சை, முறையாக செய்யப்படுகிறதா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், அவர்கள் எந்த விதமான சீரம்களை உபயோகிக்கின்றனர்; போதுமான அளவு சத்துக்களை, குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்துகின்றனரா என்பதும் தெரியாது.
ஹைட்ராபேஷியல் செய்வதற்கு முன், சருமம் சுத்தமாகவும், நோய் தொற்றுகள், முகப்பருக்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்த பின்னரே செய்ய வேண்டும்.
ஹைட்ராபேஷியல் சிகிச்சையை செய்வதற்கு முன், தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. சிகிச்சைக்குப் பின், புறஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, தோல் மருத்துவர் பரிந்துரை செய்யும் சன் ஸ்கிரீன், நீர்ச்சத்தை தக்க வைக்கும் கிரீம்களை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
டாக்டர் கே.ஆர்.ஷர்மிதா, தோல் மருத்துவ ஆலோசகர், சென்னை. 98409 43203 enquiry@ simshospitals.com
