PUBLISHED ON : நவ 10, 2024

நவம்பர் 04: பசுமை பந்தல் அமைப்பது உள்ளிட்ட நவீன யுக்திகளால் அனல் காற்று மரணங்கள் தவிர்க்கப்பட்டு, மக்களின் வரிப்பணத்தில் இருந்து நிவாரணமாக வழங்கப்படவுள்ள 4 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்!
நவம்பர் 05: பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இருந்து 182 பேச்சாளர்களை கழகத்துக்காக உதயநிதி அடையாளம் கண்டதுபோல, துணை முதல்வரையும் பல போட்டியாளர்களில் இருந்து தான் நம் முதல்வர் தேர்ந்தெடுத்திருப்பார்!
நவம்பர் 06: எதிர்கட்சி தலைவராக பழனிசாமி சிறப்பாக பணியாற்றுவதால், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 'லோக்சபா தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சரிவர பணியாற்றவில்லை' என்ற அவரின் குற்றச்சாட்டை அனைவரும் ஏற்றிருப்பர்!
நவம்பர் 07: 'எ ந்த புள்ளி விபரத்தை எடுத்தாலும் தமிழகமே முன்னணி மாநிலம்' என்ற முதல்வரிடம், 'சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம்?' என, வெட்டுபட்ட நெல்லை மாணவன் கேட்பதுபோல கனவு கண்டேன்!
நவம்பர் 08: ஈ.வெ.ரா., நுாலக திறப்பு விழா தேதியை, அடிக்கல் நாட்டு விழாவிலேயே முதல்வர் அறிவித்ததுபோல, போதையில்லா தமிழகம் எப்போது உருவாகும் என்கிற தேதியையும் அறிவிக்கின்ற நாளுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!