
வளைந்து கொடுத்து வாழத் தெரிந்தவளே...
உன் தன்மையை பிரதிபலிக்கும் குணத்துடன் கூடிய பிரம்பு பொருட்களால் உன் வாழ்விட சூழலை நிரப்பிட விரும்புகிறாயா; 'ஆம்' எனில் நீ அணுக வேண்டிய முகவரி... செங்கல்பட்டு, கானாத்துார் கேன் ஸ்டுடியோ.
அனுபவமிக்க கைவினை கலைஞர்கள், 2,400 சதுர அடி தொழிற்கூடத்தில் அசாம், அருணாச்சல பிரதேச பிரம்புகளை அழகின் வடிவமாய் வளைக்கின்றனர். இவர்களின் விரல்களுக்குள் திடமான 'ரத்தன்' பிரம்பு, 'விக்கர்' பின்னல் முறையில் நாற்காலியாக, தேநீர்/ உணவு மேஜையாக, சோபாவாக, புத்தக அலமாரியாக, அலங்கார பொருட்களாக உருமாறுகிறது!
இப்பிரம்பின் மெல்லிய தோல் கொண்டு 100க்கும் மேலான வடிவங்களில், 10 அங்குலம் முதல் ஆறடி வரை லேம்ப் ேஷடுகள் மிளிர்கின்றன. 'பிரம்பு நார்களால் பின்னப்பட்ட அலுவலக சுழல் நாற்காலி உடலுக்கு சூடு ஏற்றாது' என்பது இவர்களது உத்தரவாதம். சாய்வு நாற்காலி, மரக்குதிரை பாணியில் மான், ஒட்டகச்சிவிங்கி, வான்கோழி வடிவ நாற்காலிகள், வட்ட வடிவ குட்டி ஊஞ்சல், தொட்டில் அனைத்தும் பிரம்பில் பிரமிப்பு தருகின்றன!
பிரம்பு பனை கொடியின் தண்டுகளை வெப்பமூட்டி, உருளையாக செதுக்கி, தோல் நீக்கி வளைத்து இவை அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன. ஓராண்டிற்கு கட்டணமில்லா பழுது நீக்கும் சேவையும் அளிக்கப்படுகிறது.
காதலுடன்... கண்ணம்மா.
99629 82966