
'ஹஸ்த் ஷில்ப்' என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா...
இது, வங்கமொழி வார்த்தையாம்; இதற்கு, 'கைவினைப்பொருள்' என்று அர்த்தமாம். சென்னை, வேளச்சேரி 'ஹஸ்த் ஷில்ப்' அங்காடியில் மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் கலைஞர்களின் தயாரிப்பிலான தனித்துவமான மரப்பொருட்கள் குவிந்திருக்கின்றன.
வீட்டின் நிலைவாசலை அழகூட்ட முத்துக்கள், மணிகள் வடிவ மரத்துண்டுகளின் மீது வண்ணமூட்டி, அதனுடன் கோர்க்கப்பட்ட மர விநாயகர்/ கிருஷ்ணர்/ கிளி/ யானை தோரணங்கள்... அரை அடி முதல் 10 அடி வரை கிடைக்கின்றன. பட்டுத்துணி ஒட்டிய பலகையில் பித்தளையிலான திருவுருவம் மற்றும் வீணை வடிவம் பதித்திருக்கும் புகைப்பட சட்டங்கள் அழகின் உச்சம்!
வண்ணம் மின்னும் மரப்பலகையில் ஆறு அங்குல டெரகோட்டா சிலையாக புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணரும், பிரமாண்ட குருஷேத்திர காட்சியும் தத்ரூபம்! வாரணாசி அம்பாரி யானை சிலை, கிருஷ்ண லீலை, தசாவதாரம் சொல்லும் மரபொம்மைகள் அனைத்திலும் மழலை சிரிப்பின் ஈர்ப்பு! 'மத்ரியோஷ்கா' எனும் சென்னபட்டணா நெஸ்டிங் மர பொம்மைகள் குழந்தைகளின் சிந்தனையை துாண்டும் விருந்து.
'அன்பளிப்பாய் நம் அன்பைச் சொல்ல இப்படைப்புகள் உதவும்' என்பது என் எண்ணம்.
காதலுடன்... கண்ணம்மா.
89397 80284