PUBLISHED ON : அக் 27, 2024

அக்டோபர் 22: 'தமிழக குழந்தைகளின் பிறவி குறைபாடுகளைக் கண்டறிய 1,000 அரசு மருத்துவமனைகளில் அரசு மேற்கொள்ள இருக்கும் பரிசோதனைகளின் முடிவுகள், தந்தையரின் குடிப்பழக்கத்தை காரணம் காட்டாது' என்பது 100 சதவீதம் உறுதி!
அக்டோபர் 23: 'தங்களை அசிங்கமாய் வசைபாடியவனை தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்தது தமிழக காவல் துறையின் கம்பீரம் எனில், வசைபாடிய இரவில் அவனை தப்பிக்க அனுமதித்ததற்கு பெயர் என்ன' எனும் கேள்வி அர்த்தமற்றது!
அக்டோபர் 24: 'அம்மா உணவகத்தில் 'இலவச' உணவு, அறநிலையத்துறை சார்பில் 'இலவச' திருமணம்' எனும் நம் முதல்வரது சமீபத்திய 'இலவச' சாதனைகள், 57 ஆண்டு கால திராவிட ஆட்சியில் செழித்திருக்கும் தமிழர் வாழ்விற்கான பெருமித சாட்சிகள்!
அக்டோபர் 25: 'ராமாயணம் வால்மீகியின் கற்பனை மட்டுமே' என்று செப்.,17, 2007ல் 'முரசொலி' சொல்லிய மு.கருணாநிதியின் கருத்தை விட, 'எனது ஆட்சியில் 2,226 கோவில்கள் கும்பாபிேஷகம் கண்டுள்ளன' எனும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கம்பீரம் செம!
அக்டோபர் 26: 'ஹிந்தி மாதம் போல் அந்தந்த மாநில மொழி மாதங்களும் கொண்டாடப்பட வேண்டும்' என்று நம் முதல்வர் சொன்னபின்பு தான், தீபாவளி பண்டிகையின் போது வாழ்த்தை தவிர்ப்பவர்களிடம் என்ன கேட்க வேண்டும் என்று எனக்குப் புரிந்தது.