
களிமண் அணிகலன்கள் உருவாக்கத்தில் 13 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நர்மதா பழனிசாமி, பி.எஸ்சி., -- அப்பேரல் பேஷன் டிசைன் பட்டதாரி; திருப்பூர் 'நட்சத்திரா டெரகோட்டா ஜூவல்லரி'யின் உரிமையாளர்.
'அடிப்படையில நான் பேஷன் டிசைனர். இப்போ, இந்த தொழில்ல ஐந்து பெண்கள் என்கூட இயங்குறாங்க. எங்க தயாரிப்புகள் கடல் தாண்டி விற்பனைக்குப் போறதுல ரொம்பவே சந்தோஷம்' என்று பெருமிதப்படும் நர்மதா...
'ரெடி டூ யூஸ்' களிமண்ணை தன் தயாரிப்புகளுக்கு பயன்படுத்துவதில்லை. பெங்களூரில் இருந்து வரும் களிமண்ணை தேவைப்படும் பதத்தில் குழைத்து பயன்படுத்துகிறார்.
என் திறன்
'என்னோட முகூர்த்த புடவை 'பேட்டர்ன்' மாதிரி வேணும்; இந்த அளவுல இத்தனை முத்துக்கள் இருக்கணும்'னு, வாடிக்கையாளர்கள் கேட்குற விதத்துல அணிகலன்களை வடிவமைக்கிற அளவுக்கு இப்போ வளர்ந்திருக்கேன்' - தன் திறமை மெருகேறி இருக்கும் விதம் பற்றி இப்படிச் சொல்லும் நர்மதா, களிமண் அணிகலன் தயாரிப்பு பயிற்சியும் அளிக்கிறார்.
இந்த அணிகலன்களின் தனித்துவம்?
எங்க தயாரிப்புகள் எல்லாம் எடை குறைவானவை. குறிப்பா, நாங்க தயாரிக்கிற களிமண் காதணிகளோட கனத்தை காதுகளால உணரவே முடியாது.
சிறப்பு பொருள்: கடவுள் திருவுருவங்கள் பதித்த களிமண் அணிகலன்கள் - ரூ.1,540
99656 62646