
'சேலம், கொத்தாம் பாடியில் 300 சதுர அடியில் என்னோட 'சேஷாய் கிராப்ட்' அங்காடி; கடை முழுக்க 'சி கிராஸ்'னு சொல்லப்படுற அசாம் புற்கள்ல தயாரான கைவினைப் பொருட்கள்; நவம்பர் 12, 2016; 'இதெல்லாத்தையும் நான் வாங்கிக் கிறேன்'னு ஒரு வாடிக்கையாளர் எடுத்துக்கிட்டார்; எனக்கு நம்பிக்கை தந்த பொன்னாள் அது!'
தமிழகம் உட்பட தென்னிந்திய அளவில் 22 கிளைகள்; 90 பெண் தொழிலாளர்களின் உழைப்பில் 70க்கும் மேலாக 'சி கிராஸ்' கைவினைப்பொருட்கள்; லட்சங்களில் வருமானம் என்பதால் திருப்தியாய் உழைக்கிறார் நிஷா.
'சி கிராஸ்' சிறப்பு
'ஆறடி உயர இந்த அசாம் புற்கள் மூன்றாண்டுகள் வரைக்கும் நிறம் மாறாம மென்மையோட இருக்கும். காய்ந்ததும் இறுகிப்போகுற தன்மையால 10 ஆண்டுகள் வரைக்கும் தாக்குப் பிடிக்கும். இதனால, எங்க 'சி கிராஸ்' கைவினைப்பொருட்கள் 10 கிலோ எடையை சுலபமா தாங்கும்!
'இதுல அன்பளிப்பு பெட்டிகள், பிக்னிக் பைகள், மார்க்கெட் பைகள், பூஜை கூடை, நகைப்பெட்டி, தண்ணீர் குடுவை தாங்கி, பைல்னு விதவிதமா தயார் பண்றோம். இந்தியா முழுக்க கிளை பரப்பி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணணும்ங்கிறது என் கனவு!' என்கிறார் நிஷா.
கனவு நிஜமாகட்டும்.
- 97153 33777
சிறப்பு பொருள்: அன்பளிப்புகள் தாங்கும் 'சி கிராஸ்' கூடை - ரூ.250 முதல்