PUBLISHED ON : அக் 13, 2024

அக்டோபர் 06: 'தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை திராவிட இயக்கத்திற்காக தாரை வார்த்திருப்பதால் தி.மு.க., குடும்ப கட்சிதான்' என முதல்வர் தந்த விளக்கத்தில் அண்ணாந்த அளவிற்கு, விமானங்களின் சாகசத்தில் நான் ஆச்சரியம் கொள்ளவில்லை!
அக்டோபர் 08: 'நான் ஹிந்து மதத்திற்கு விரோதி அல்ல' என்பவர்களிடம், கிறிஸ்துவ மதத்தை தழுவியிருக்கும் ஆந்திர துணை முதல்வரின் மகள் ஹிந்து மதம் மீதான தன் நம்பிக்கையை திருப்பதியில் நிரூபித்ததைப் பற்றி ஒருபோதும் பேச மாட்டேன்!
அக்டோபர் 09: 'தேசநலன் காக்கும் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டுக்கு வலிமை சேர்க்க வேண்டும்' என்று சொன்னது போல், 'டாஸ்மாக் பக்கம் செல்லாமல் மக்கள் உடல் நலன் காக்க வேண்டும்' என்று நம் முதல்வர் அறிவுறுத்துவதாக எனக்கு கனவு!
அக்டோபர் 11:'சினிமாவில் கோடிகளை குவிக்கும் த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் அவற்றை துறந்து அரசியலுக்கு வருகிறார்' என்றுதான் உருட்ட வேண்டுமே தவிர, 'அரசியலில் சினிமாவைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கலாம்' என்று உளறக் கூடாது!
அக்டோபர் 12:'கருணாநிதி இருந்தவரை நமக்காக பேச அவர் இருந்தார்' என நடிகர் பிரகாஷ்ராஜ் சொன்னதும் சிலிர்த்தேன்; 'பொய் சொல்ல தைரியம் வேண்டும்' என அடுத்து அவர் பேருண்மை சொன்னதும் எழுந்து நின்று கைதட்டினேன்.