
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
கடந்த மே 31ம் தேதி, கோவை சின்னவேடம்பட்டி தண்ணீர் தொட்டியில பலியான ஒடிசா தொழிலாளி குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிச்சு நிவாரண உதவிகள் அறிவிச்ச நீங்க, என் அம்மா மரணத்தை ஏன் கண்டுக்க மாட்டேங்குறீங்க?
பிப்ரவரி 16ம் தேதி கிருஷ்ணகிரி, தல்சூர் ஊராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கிறப்போ மின்சாரம் தாக்கி என் அம்மா இறந்துட்டாங்க. மின்கம்பி அறுந்து கிடந்ததுதான் எங்க அம்மா உயிரிழக்க காரணம்!
தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு; சம்பவ இடத்தை தாசில்தார் ஆய்வு பண்ணினார்; மின்கம்பியை சீர் பண்ணியாச்சு; உங்க கூட்டணி கட்சியோட தளி தொகுதி எம்.எல்.ஏ., 'நிவாரணத்துக்கு ஏற்பாடு செய்றேன்'னு சொல்லிட்டுப் போயிட்டார்!
'முதல்வர் நிவாரண நிதி' கேட்டு ஜூன் 14ம் தேதி ஜமாபந்திக்கு வந்த ஆட்சியர்கிட்டே மனு கொடுத்தோம். எண்: 16ன்னு போட்டு மனுவுக்கான ஒப்புதல் சீட்டு கிடைச்சதோட சரி. கொடுத்த வாக்குறுதி அடிப்படையில, சகோதரருக்கு மின்வாரிய தரப்புல இருந்து கிடைச்ச தற்காலிக பணிக்கும் நான்கு மாதமா ஊதியம் வரலை!
இதுதான் 'திராவிட மாடல்' நிர்வாகமா?
- ஊராட்சி குடிநீர் குழாய்க்கு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியால் சிக்கி பலியான ரத்தினம்மாவின் மகள் புனிதா, தல்சூர், கிருஷ்ணகிரி.