
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
உங்களைப் பொறுத்தவரைக்கும் அது வெறும் 1,200 ரூபாய்தான்; ஆனா, எனக்கு அது என் உயிர் நீட்டிக்கிற காசு; என் மருத்துவ செலவுக்கான உதவித்தொகை; இப்படியான என் முதியோர் உதவித்தொகை ஆகஸ்ட் 2023க்கு அப்புறம் எனக்கு வரலை!
புதிய முகவரி சான்றுகளோட வடவள்ளி 'இ - சேவை' மையத்துல நவம்பர் 21ம் தேதி விண்ணப்பிச்சேன். டிசம்பர் 23, 2023 தேதியிட்ட செயல்முறை ஆணை எண்: டிஎன்9012ஏ20231328737ன்படி பேரூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் எனக்கு ஓய்வூதியம் வழங்க ஆணையிட்ட நகல் கிடைச்சது. ஓய்வூதிய கணக்கு எண்:110154097207 குறிப்பிட்டு 'வங்கி சேமிப்பு கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்படும்'னு அதுல குறிப்பிட்டிருந்தது!
ஆனா, இன்னும் பணம் வரலை. காரணம் கேட்டு நடையா நடந்துட்டேன். இந்த ஜூலை 1ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம்ல மனு கொடுத்தும் பலனில்லை; மனு எண்: TN/REV/CBE/I/COLLMGDP/01JUL24/8298933.
மக்களுக்கு நல்லது செய்யணும்னு நீங்க விரும்புறீங்க சரி; ஆனா, உங்க அதிகாரிகளுக்கு உங்க விருப்பத்தின் மேல அக்கறை இல்லைன்னு நான் சொல்றேன்; இதை உங்களால மறுக்க முடியுமா?
- நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் பெறும் ஆணையுடன் ஓராண்டாக போராடும் 70 வயது ராஜேஸ்வரி, வடவள்ளி, கோவை.