
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
மே 21, 2023; ஆரணி அரசு மருத்துவமனையில பிரசவத்துக்காக ஆரோக்கியமா அனுமதிக்கப்பட்ட என் மக, இப்போ படுக்கையில கிடக்குறா; அவளுக்கு பேச்சு வரலை; நிற்கவும், நடக்கவும் முடியலை!
சம்பவ நாள்ல அவளுக்கு ஆண் குழந்தை பிறந்ததும், வேலுார் அரசு மருத்துவமனைக்கு அவளை இடம் மாற்றினாங்க. 'இதயக்கோளாறு'ன்னு காரணம் சொன்னாங்களே தவிர, தலையோட பின்பகுதியிலேயும், பாதங்கள்லேயும் இருந்த ரத்தக்காயங்களுக்கு காரணம் சொல்லலை!
சுகாதாரத்துறை அமைச்சர்கிட்டே மனு கொடுத்ததும், ஜூலை 7, 2023ல் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரவழைச்சாங்க. தலையில நரம்புகள் பாதிச்சிருக்கிறது தெரிய வந்தது. இப்போ, நரம்பியல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில சக்திக்கு மீறி செலவு பண்ணிட்டு இருக்குறோம்.
'உண்மை தெரியணும்; தவறு செய்த மருத்துவர்கள் மேல நடவடிக்கை எடுக்கணும்; நிவாரணம் வேணும்'னு உங்க தனிப்பிரிவுலேயும், ஆட்சியர்கிட்டேயும் பலமுறை மனு கொடுத்துட்டோம்.
பாதிக்கப்பட்ட அரசு மருத்துவருக்கு உடனடியா கிடைக்கிற நீதி, சாமானிய மக்களான எங்களுக்கு ஏன் தாமதமாகுது?
- அரசு மருத்துவமனை பிரசவ சிகிச்சைக்குப் பின் படுக்கையில் விழுந்த 29 வயது ஜெயந்திக்காக நீதி கேட்கும் தாய் குமாரி மற்றும் மாற்றுத்திறனாளி சகோதரி ராஜேஸ்வரி, தெள்ளூர், திருவண்ணாமலை.