
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
அரசுப்பள்ளி மாணவன் பள்ளிக்கு வராம இருந்தா மட்டும்தான் பெற்றோருக்கு போன் போட்டு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் விசாரிப்பாரா; பள்ளிக்கு வர்ற பையன் ஒரு கை இல்லாம வர்றதுக்கான காரணத்தை அப்பா, அம்மாகிட்டே கேட்டு தெரிஞ்சுக்க மாட்டாரா?
கடந்த 2023, ஜூன் மாதம் 8ம் தேதி விக்ரமம் காளியம்மன் கோவில் திருவிழா வாணவேடிக்கை வழக்கம்போல சிறப்பா நடந்தது. இரண்டாவது நாள் ஜூன் 10ம் தேதி காலையில, வெடிக்காம கிடந்த ஒரு வெடியை என் பையன் கையில துாக்குறப்போ அது வெடிச்சு அவன் இடதுகை சிதைஞ்சிருச்சு!
எங்க புகார் அடிப்படையில, 'வெடிபொருள் அபாய விளைவுக்கு எதிராக போதிய ஏற்பாடுகள் செய்து ஒழுங்குபடுத்தாதது; கவனக்குறைவால் கொடுங்காயம் ஏற்பட காரணமாவது' உள்ளிட்ட 286, 338 சட்டப்பிரிவுகள்ல முதல் தகவல் அறிக்கை (எண்: 35/23) பதிவாச்சு!
என்ன பிரயோஜனம்... மாற்றுத்திறனாளி உதவித்தொகையை தவிர அரசு தரப்புல இருந்து எந்த நிவாரணமும் அவனுக்கு இல்லை! பட்டாசு ஆலை வெடி விபத்துன்னா உடனடி நிவாரணம் அறிவிக்கிற உங்களுக்கு, எதிர்காலம் இழந்த என் மகனுக்கு இழப்பீடு தரணும்னு ஏன்யா தோணலை?
- கோவில் திருவிழா வெடி விபத்தில் இடது கை இழந்த 13 வயது சரத்தின் தாய் மாரியம்மாள், விக்ரமம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்.