
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
கணவரை இழந்து தவிக்கிற மாட்டாங்குப்பம் மீனவ குடும்பத்து பெண் நான்!
கடந்த ஜனவரி 8ம் தேதி இரவு 8:20 மணியளவுல, சேப்பாக்கம், பெல்ஸ் சாலை அரசு மகப்பேறு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை ஒட்டி நடந்து போயிட்டு இருந்த என் கணவர் மேல, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்துலேயே அவர் இறந்துட்டார்!
அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்துல முதல் தகவல் அறிக்கை - 8/2024 பதிவாகி இருக்கு. இழப்பீடு வாங்குறதுக்காக, மாட்டாங்குப்பம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எண்:872 மற்றும் தமிழக மீனவர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை எண்:0202M030795 குறிப்பிட்டு, ராயபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு மனு கொடுத்தோம்.
பதில் கடிதமா ஏப்ரல் 24 தேதியிட்ட ந.க.எண்:133/அ2/2024 மூலம் ராயபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கேட்டிருந்த ஆவணங்களை கொடுத்தும் இன்னும் இழப்பீடு கிடைக்கலை!
'மீனவ சமுதாயத்தின் நலன் காப்பதில் இந்த ஆட்சி எப்போதும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது'ன்னு உங்க அரசு சொல்றதை எப்படிய்யா இனி நான் நம்புறது?
- அரசு பேருந்து மோதி கணவர் அண்ணாதுரை உயிரிழக்க, இழப்பீடு கேட்டுப் போராடும் 59 வயது குப்புலட்சுமி, திருவல்லிக்கேணி, சென்னை.