
'தமிழகத்தில் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு'ன்னு செய்தி வெளியானதும், 'விளம்பரத்துக்காக இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவது உகந்ததல்ல'ன்னு டி.ஜி.பி., அறிக்கை விடுறார். செய்திக்கு காரணமான கொலைகளோட பின்னணி பற்றி விளக்கம் தர்றார்.
ஏன் சார்... 'குற்றங்கள் பூஜ்ஜியமாகணும்'னு நீங்க விரும்புறப்போ, இப்படியான விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதுதானா; சட்டம் ஒழுங்கு தமிழகத்துல சரியா இருக்குன்னு நீங்க நம்புறீங்களா?
கடந்த செவ்வாய்கிழமை செப்டம்பர் 10ம் தேதி, கோவை எக்ஸ்பிரஸ்ல என் குழந்தைகளோட சென்னைக்கு வந்துட்டு இருந்தேன். இரவு 10:30 மணி; சென்னை, பேசின்பிரிட்ஜ் நிலையத்தை ரயில் கடந்த நிமிஷம், எனக்கு பின்னாடி நின்னுட்டு இருந்தவன் என் தாலிச்செயினை மின்னல் வேகத்துல பறிச்சுட்டு ரயில்ல இருந்து குதிச்சு ஓடிட்டான்.
சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்துல முதல் தகவல் அறிக்கை - 216/ 2024 பதிவாகி இருக்கு!
ஒரு அமைச்சரோட மனைவிக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தா இந்நேரம் குற்றவாளி பிடிபட்டிருப்பானா... இல்லையா; பத்திரிகையாளர் மனைவியோட தாலிச்செயினை பறிச்சவன் ஏன் இன்னும் கைது செய்யப்படலை?
- சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே செயின் பறிப்பு கொள்ளையனிடம் தன் தாலிச்செயினை பறிகொடுத்த மாலதி சேது, நந்தனம், சென்னை.