
'நான் கிருஷ்ண குமார் மாமாவோட வந்துட்டு இருக்கேன்' - ஸ்ருதி போன் பண்ணினப்போ, ராத்திரிக்குள்ளே அவ வந்து சேர்ந்திடுவான்னு தான் நினைச்சேன். ஆனா, அவ வரலை. வயசுப் பொண்ணு சொன்ன நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னதும், ஒரு அம்மாவா நான் பயந்திருக்கணும். ஆனா, நான் பயப்படலை.
ஏன்னா, அவ கூட இருக்கிறது கிருஷ்ணகுமார்; என் கணவரோட நண்பர். என் கணவர் நல்லவர்; அப்போ, அவரோட நண்பரும் நல்லவராத்தானே இருக்கணுங்கிறது என் எண்ணம். ஆனா, என் எண்ணத்தை எல்லாம் தவிடு பொடியாக்குற மாதிரி ஒரு தொலைபேசி அழைப்பு; பேசினது, போலீஸ் இன்ஸ்பெக்டர்.
என்ன நடந்திருக்கும்னு உங்களால யூகிக்க முடியுதுல்ல! ஆமா...
இதேமாதிரி தாறுமாறா யோசிச்சு தான் கிருஷ்ணகுமாரையும், என் பொண்ணையும் போலீஸ்ல பிடிச்சு வைச்சிருந்தாங்க.
போலீஸ் ஸ்டேஷன்ல, நான் தலை குனியலை. 'மனசு அழுக்கா இருக்குற வரைக்கும் உங்க எல்லார் பார்வையும் அழுக்கா தான் இருக்கும்'னு கம்பீரமா சொன்னேன். அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் உட்பட, யாரும் குனிஞ்ச தலை நிமிரலை!
என் ஸ்ருதி முகத்துல அப்படி ஒரு பூரிப்பு; இதோ... இந்த மாதிரி!

