
கனவு கண்டா மட்டும் போதாது; ஆசைப்படணும்! அதுவும், பெண்கள் நாம நிறைய ஆசைப்படணும். அப்போ தான், நாம தாங்கி நிற்கிற நம்ம குடும்பம், வாழ்க்கையை கத்துக்கும்.
எனக்கு நிறைய ஆசைகள் உண்டு. வேலைக்குப் போற எல்லா பெண்களையும் ஆச்சரி யமா பார்ப்பேன்; அப்படி ஒரு வேலைக்கு நாமளும் போகணும்னு ஆசைப்படுவேன். குடும்பத்துக்காக தன்னை வருத்திட்டு உழைக்கிற பெண்களைப் பார்த்து பெருமைப்படுவேன்; அவங்களை மாதிரி, குடும்பத்துக்கு ஆணி வேரா ஆகணும்னு ஆசைப்படுவேன்.
இப்படி எனக்குள்ளே நான் விதைச்சுக்கிட்ட ஆசைகள் தான், என் கூச்சத்துக்கு கொள்ளி வைச்சு, எனக்குள்ளே தன்னம்பிக்கை வர காரணமாச்சு. 'என்னால எல்லாம் முடியும்'னு நம்பினேன்; சாதிச்சேன்; 'எது வாழ்க்கை'ன்னு என் குடும்பத்துக்கும் புரிய வைச்சேன்.
'ஆசை தான் துன்பத்துக்கு காரணம்'னு புத்தர் சொன்னார். 'ஆசை தான் வெற்றிக்கு காரணம்'னு இந்த விஜயலட்சுமி சொல்றேன். நீங்க எதை நம்பப் போறீங்க?

