
கல்லறை தோட்டம். சவப்பெட்டிக்குள்ளே நான்... ஸ்டெல்லா.
'கடைசி முத்தம் கொடுக்குறவங்க கொடுத்துக்கலாம்' - குரல் வந்ததும், என் முகத்துல வெள்ளை துணி போர்த்துறார் என் கணவர் பீட்டர். முதல் முத்தம், என் அம்மா கொடுத்தாங்க. அடுத்தது பீட்டர்.
'வேற யாராவது இருக்கீங்களா?' குரல் உயர்ந்தது. 'இன்னும் ஒருத்தர் இருக்குறார்' - பீட்டர் சொன்னதும், 'யார் அது?'ன்னு என் ஆன்மா தவிக்க ஆரம்பிச்சது. இதோ... என் முகத்துல இருந்த வெள்ளைத் துணி மெதுவாக விலகுது. வந்து நின்னது ஜோசப்;
என் முதல் கணவர்!
தேம்பி தேம்பி அழுதுட்டே, 'ப்ப்ப்ச்ச்ச்...' - அழுத்தமா ஒரு முத்தம்; அவ்வளவு தான்...
என் ஆன்மா அமைதி ஆகுது. மனைவியோட முதல் காதலுக்கு மரியாதை தர்ற அளவு, பீட்டருக்கு என் பெண்மையை புரிய வைச்சிருக்கேன்ங்கிற திருப்தி என் ஆன்மாவுக்கு!
ஓர் ஆணுக்கு மனைவியா 'இருக்குறது' இல்ல... மனைவியா 'வாழ்றது' தான் பெண்மைக்கு பெருமை; சரிதானே?

