
எல்லா ஆணுக்கும் இருக்குற மன அழுத்தம் ஜோஷ்வாக்கும் இருந்தது. ஜோஷ்வா... என் அண்ணன். வாழ்க்கையை அனுபவிச்சு ரசிக்க வேண்டிய 15 வயசுல, குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டிய சூழல் அவனுக்கு; துபாய் போயிட்டான். அவன் திரும்பி வந்தது, என்னோட இறுதி அஞ்சலிக்கு!
உறவுகள் மேல எந்த பிடிப்பும் அவனுக்கு இல்லை! திடீர்னு ஒருநாள், அவன் முன்னாடி நான் வந்தேன். அவன் கண்களுக்கு மட்டுமே தெரிய ஆரம்பிச்சேன். முதல்ல பயந்தவன், மெல்ல மெல்ல என்கூட பழகினான். இந்த தங்கையோட பாசம், அவனை கொஞ்சம் கொஞ்சமா நெகிழ வைச்சது.
'குடும்பத்துக்காக மட்டுமே வாழ்ற வாழ்க்கையில பிடிப்பு இருக்காது'ன்னு அவனுக்கு புரிய வைச்சேன். அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குறதை ஞாபகப்படுத்தினேன். அவன் கண்கள்ல மாற்றம் தெரிஞ்சது.
'ஜென்னி...'ன்னு அவன் என்னை கூப்பிடுற போதெல்லாம், அவன் கண்கள் வடித்த பாசத்தை என்னால உணர முடிஞ்சது.
வாழ்க்கையோட மெல்லிய உணர்வுகளை ஜோஷ்வா உணர ஆரம்பிச்சிட்டான்.
ஓர் ஆணோட வாழ்க்கையில பெண்ணுக்குரிய கடமையை முடிச்சதா எனக்குள்ளே ஒரு திருப்தி!

