
'பெண்' - தீபமா; தீக்குச்சியா?
பெரு மழைக்கு இன்னும் சில நிமிடங்கள். பால்கனியில்... இசை மேல் தீராக் காதல் கொண்ட பீட்டர்.
உடைகளை சரி பண்ணிட்டு கட்டில்ல இருந்து இறங்கினேன். 'பீட்டர்... நேத்து என்கூட நீ முழுமையா இல்லையோன்னு எனக்குத் தோணுது!' நான் இப்படிச் சொன்னதும், பீட்டருக்குள்ளே அப்படி ஒரு பரவசம்.
'ஆமா சாரா; என் மனசு முழுக்க தாளத்தை சுத்தியே இருக்கு. என் உயிர், உடல் எல்லாமே தாளமா துடிச்சுட்டு இருக்கு. எனக்கு ஒரு குரு மட்டும் கிடைச்சிட்டாருன்னா...'
'ஏன் பீட்டர்... ஏன் ஒரு மனுஷனுக்குள்ளே குருவை தேடிப் போறே; உன்னைச் சுத்தி எத்தனை
குரு இருக்காங்க பாரு...' நான் ஆரம்பிக்க, மழையும் ஆரம்பிச்சது.
'இதோ... கொட்டுற மழை, சிறகடிக்கிற பறவை, உதிர்ற இலை, மோதுற காத்து, அடிக்கிற அலை... இது எல்லாம் உனக்கு தாளம் சொல்லிக் கொடுக்கலையா;
உனக்கு தாளம் சொல்லிக் கொடுக்குறதுக்கு இந்த உலகமே இருக்கு பீட்டர்; போ... உன் தாளத்தை தேடிப் போ!'
என் வார்த்தைகளை கேட்டதும், பீட்டர் முகத்துல ஒளி; பெரும் ஒளி; தீப ஒளி!
என் பெண்மையை நான் தீக்குச்சியா உணர்ந்த தருணம் அது!

