sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

அவளே சரணம்

/

பெண்மை என் பெருமை!

/

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : அக் 06, 2024

Google News

PUBLISHED ON : அக் 06, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனது நாதஸ்வரத்தின் சீவாளிகளை தேர்ந்தெடுத்து ஊதி ஊதி ஈரப்படுத் திக் கொண்டிருந்தார் சங்கரி. 'இசைக் கருவிகளின் ராஜா' என்று போற்றப் படும் நாதஸ்வரத்தை தன் 10 வயதி லேயே இசைக்கப் பழகியவர். திருச்சி தொட்டியத்தில் வசிப்பவருக்கு, 24 ஆண்டு கச்சேரி அனுபவம் சந்தோஷத்தையும் கோபத்தையும் வழங்கிஇருக்கிறது.

நாதஸ்வரம் உங்க கைக்கு வந்த கதை...?

எங்கப்பா நாயனம் வாசிக்க கற்றுக்கொடுத்தப்போ, 'பசங்க நாயனம் கத்துக்கிட்டா கச்சேரிக்கு போவாங்க; பொம்பள புள்ள கத்துக்கிட்டு என்ன ஆகப்போகுது'ன்னு நிறைய பேர் பேசியிருக்காங்க! அப்படி பேசுனவங்க மேல எனக்கிருந்த கோபத்தை பிடிவாதமா மாத்திக்கிட்டேன். 'நாதஸ்வரம்தான் என் அடையாளம்'னு 15 வயசுலேயே முடிவு பண்ணிட்டேன்!

பெண் நாதஸ்வர கலைஞர்கள் நிறையபேர் இருக்குறாங்களே?

உண்மைதான்; 'எங்க குழுவுல பெண் நாதஸ்வர கலைஞர் இருக்கார்'னு சொல்லியே நிகழ்ச்சி ஒப்பந்தம் பண்றாங்க; பெண்கள் நாயனம் வாசிக்கிறது பார்வையாளர்களை ஈர்க்குது. ஆனா, இதுக்காகவே எங்களை அதிசயமா அணுகுறதை 'வெற்றி'ன்னு சொல்ல முடியுமா; எங்க கலைக்கும், திறமைக்குமான மரியாதை கிடைக்கிறதுதான் உண்மையான வெற்றி!

ஏன்... ஆண் கலைஞர்களுக்கு இணையா ஊதியம் வர்றதில்லையா?

நான் பணத்தை பற்றி மட்டும் பேசலை. நிகழ்ச்சிக்கு வர்ற இடத்துல உடை மாத்திக்கிறதுக்கும், ஓய்வு எடுத்துக்கிறதுக்கும் எங்களுக்குன்னு இடம் தரப்படுறதில்லை. இது போதாதுன்னு இரட்டை அர்த்தத்துல பேசுற, நிற பாகுபாடு பார்க்குற ஈனப்பிறவிகளோட தொல்லையும் இருக்கு!

சங்கரி இசைத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார். கணவர் வெங்கடேஷ், தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் நாதஸ்வரம் இசைக்கிறார். மகன் ஸ்ரீராம் பள்ளிக்குச் செல்ல, தொட்டிலில் ஆடும் குழந்தையாக மகள் கிரண்யா!

சங்கரியோட சக்தியை அதிகமா உறிஞ்சுறது எது?

குடும்ப பொறுப்புகள்; மகனை சுமந்திருக்கிறப்போ எடுத்த இடைவெளியால பிரசவத்துக்கு அப்புறம் நாயனம் வாசிக்க ரொம்ப சிரமப்பட்டேன். இதனாலேயே, பொண்ணு பிறக்குறதுக்கு முதல் மாதம் வரை வாசிச்சேன். ஒரு கச்சேரியில பாப்பாவை மடியில போட்டுக்கிட்டே வாசிச்சேன். இப்போ, குழந்தைகளை கவனிச்சுக்கிறதுக்காக சில கச்சேரிகளை தவிர்க்கிறேன். 'குழந்தைங்க வளர்ற வரைக்கும் நாயனத்தை தொடாதே'னு உறவுகள் சொல்றாங்க. ஆனா, அதுக்கு வாய்ப்பே இல்லை.

வாழ்க்கையோட அழுத்தங்களை தாங்குறதுல ரொம்ப இஷ்டமா?

ம்ஹும்... நாயனம் மாதிரி அழுத்தங்களை முறையா வெளியேற்ற எனக்குத் தெரியும்.

சங்கரியின் புதுப்புது அர்த்தங்கள்

* பெண் - கலை

* நாதஸ்வரம் - உயிர்

* கோபம் - ஆயுதம்






      Dinamalar
      Follow us