sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

சத்தி ரோட்டில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு என்ன விலை கொடுக்கலாம்?

/

சத்தி ரோட்டில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு என்ன விலை கொடுக்கலாம்?

சத்தி ரோட்டில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு என்ன விலை கொடுக்கலாம்?

சத்தி ரோட்டில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு என்ன விலை கொடுக்கலாம்?


ADDED : ஆக 22, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோ வை மாவட்டம், சத்தி ரோடு, கணேசபுரத்தில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் ரோட்டில் உட்புறமாக, 30 அடி தார் சாலையை ஒட்டி ஒரு ஏக்கர் நிலம் மற்றும் 20 ஆயிரம் சதுரடிகள், 10 ஆண்டு பழமையான, 'ஜி.ஐ., சீட் குடோன்' விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?

-காயத்திரி, அன்னுார்.

புதிய மாஸ்டர் பிளானின்படி, இந்த இடம் எந்த உபயோக பிரிவில் வருகிறது என்று பார்க்கவும். 'இண்டஸ்ட்ரியல்' அல்லது 'அன்கிளாசிபைடு' என்று வந்தால் இந்த இடமும், ஷெட்டும் தீங்கு விளைவிக்காத தொழிற்சாலை ஆரம்பிக்க உகந்த இடம். அப்படியே தொழிற்சாலைக்கு வாடகைக்கு விடலாம்.

இல்லையெனில், குடியிருப்பு பகுதியாக தேவைப்படுகிறது என்றால் அந்த ஷெட்டை கழற்றிவிட்டு மனை பகுதிகளாக பிரித்து, உரிய அங்கீகாரம் பெற்று விற்க முயற்சிக்கலாம். எப்படி பார்த்தாலும் ரூ.2 கோடி என்பது தப்பில்லாத விலை.

கோவை, பொள்ளாச்சி பிரதான சாலை, கிணத்துக்கடவில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் காற்றாலை மில் பகுதியில் தார் ரோட்டில் இருந்து, 100 மீ., தொலைவில், 30 அடி சாலையில் முன்பு காற்றாலை மில் இருந்த பகுதி, தற்போது காலியாக உள்ளது. இதை டி.டி.சி.பி., சைட்டாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

- இளங்கோ, காந்திபுரம்.

புது மாஸ்டர் பிளானின்படி இந்த கிராமம், இந்த புல எண், எதற்காக இவை உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். குடியிருப்பு பகுதியாக இருந்தால் பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை. முதல் படியாக, சர்வேயர் வைத்து அளந்து தங்களது பத்திரத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் க.ச., எண்களின்படி, அளவுகள் நிலையில் உள்ளதா என பார்க்கவும்.

ஆம் என்றால், அடுத்ததாக அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரை வைத்து, மனை பிரிவுகள் விதிப்படி(தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள் 2015) மனைகளை பிரித்து, உரிய ஆவணங்கள் இணைத்து, டி.டி.சி.பி., சைட்டில் பதிவேற்றம் செய்து, அதன் வழிமுறைகள் பின்பற்றி டி.டி.சி.பி., ஒப்புதல் பெற வேண்டும்.

அதன் பின்னர், அதை காண்பித்து உள்ளாட்சியிலும் உரிய அனுமதி பெற வேண்டும். பின்னர், 'ரெரா' அமைப்புக்கும் சமர்ப்பித்து, உரிய அங்கீகாரம் பெற வேண்டும். நிலைகளும், படிகளும் நிறைய உள்ளதால் காலம் எடுக்கும். தளராமல் முயலவும்.

சூலுாரில் இருந்து தெற்கே, 10 கி.மீ., தொலைவில் செட்டிபாளையம் பிரதான சாலை அருகே எனக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் இப்போது பொருள் வைப்பதற்கு குடோன்கள் நிறைய உள்ளன. கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டால் என்ன வாடகை கிடைக்கும்.

- தமிழரசன், சூலுார்.

தேசிய நெடுஞ்சாலையிலோ அல்லது அதற்கு அருகே செல்ல நல்ல ரோடு உள்ள பாதைகளில், இந்த இடம் அமைந்தால் அதுவே முதல் சிறப்பு. குறைந்தபட்சம், 14 அடி உயரமுள்ள ஷெட்டுகளாகவும், அதன் அகலம், 40 அடி முதல், 60 அடியாக இருந்தால் ஒரே ஷெட்டாகவோ அல்லது இரண்டு, மூன்றாகவோ பிரித்து வாடகைக்கு விடலாம்.

சதுரடிக்கு ரூ.8 கிடைக்க வாய்ப்புண்டு. இரண்டுக்கும் மேற்பட்ட ஷெட்டுகள் அமைத்து வாடகைதாரருக்கு இதர சவுகரியங்கள்(செக்யூரிட்டி, தங்கும் வசதி, கழிவறை, காம்பவுண்ட் சுவர் உட்பட) செய்து கொடுத்து, ரூ.10 ஆயிரம் வரை பெறலாம்.

தகவல்:

ஆர்.எம்.மயிலேறு

கன்சல்டிங் இன்ஜினியர்.






      Dinamalar
      Follow us