/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
மொட்டை மாடியில் வெப்பம் தணிக்க என்ன செய்ய வேண்டும்?
/
மொட்டை மாடியில் வெப்பம் தணிக்க என்ன செய்ய வேண்டும்?
மொட்டை மாடியில் வெப்பம் தணிக்க என்ன செய்ய வேண்டும்?
மொட்டை மாடியில் வெப்பம் தணிக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED : ஆக 15, 2025 09:04 PM

த ற்போது நிறைய கட்டடங்களில் மொட்டை மாடியில், டைல்ஸ் அமைக்க உரிமையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். அதில் சற்று கவனம் தேவை.
மொட்டை மாடியில்தான் வெயிலின் தாக்கம் கட்டடத்திலேயே மிக அதிமாக இருக்கும். அதை சமாளிக்கும் விதமாக டைல்ஸ் நடுவே, சிறிய இடைவெளி விட்டு பதிக்க வேண்டும். இல்லையேல் கண்டிப்பாக வெயிலின் தாக்கம் காரணமாக டைல்ஸ் நகர்ந்தோ, உடைந்தோ அல்லது மேலே துாக்கவோ செய்யும். நாம் கட்டடங்களின் முகப்பு பகுதிகளில், அலங்கார ஓடுகள் பதிக்கின்றோம். கிரானைட் மற்றும் டைல்ஸ் அவ்வாறு பதிக்கும்போது, கூடுதல் கவனத்துடன் பதித்தல் வேண்டும்.
கலவை கனம் அதிகமாகிவிட்டால், வெப்பம் காரணமாக சில ஓடுகள் விழுந்துவிட வாய்ப்புள்ளது. தற்போது, இதற்கென சில இணைப்பான்கள் விற்கப்படுகின்றன.
மிகக்குறைந்த கனத்தில் போதுமானது. அதேபோல், டைல்ஸ் வைக்காத இடத்திலும் சுருக்கி அமைத்து சிமென்ட் தளம் பூசும்போதும் கலவை கனம் அதிகமானால் விரிசல்கள் வரும்.
வெளிப்புற சுவர்களின் மீது 'பிரைமர்' அடித்து, தரமான பெயின்ட் அடிப்பது அவசியம். அவ்வாறு, செய்யாவிட்டால் சுவர் மற்றும் ஜன்னல்களில் பெயின்ட் உரிந்து வந்துவிடும்.