/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அடித்தள துாணும், மண் ஆய்வும் ஸ்ட்ராங் வீட்டுக்கு முக்கிய தேவை
/
அடித்தள துாணும், மண் ஆய்வும் ஸ்ட்ராங் வீட்டுக்கு முக்கிய தேவை
அடித்தள துாணும், மண் ஆய்வும் ஸ்ட்ராங் வீட்டுக்கு முக்கிய தேவை
அடித்தள துாணும், மண் ஆய்வும் ஸ்ட்ராங் வீட்டுக்கு முக்கிய தேவை
ADDED : ஆக 22, 2025 11:08 PM

பா துகாப்பான மற்றும் நீடித்த வீடு கட்ட, மண் பரிசோதனை மிக அவசியம். மண்ணின் தாங்கும் திறன் என்பது ஒரு சதுர அடிக்கு எவ்வளவு எடையை தாங்க முடியும் என்பதை குறிக்கும்.
தவறான மதிப்பீடானது கட்டடத்தின் அமைப்புச் செயல்திறனை பாதிக்கும் என்கிறார், கோவை மண்டல சிவில் இன்ஜினியர்கள் சங்க மக்கள் தொடர்பு அலுவலர் குமரேசன்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
மண் பரிசோதனை இல்லாமல் வீடு கட்டினால், பல முக்கிய பிரச்னைகள் ஏற்படலாம். அடித்தளம் தாழ்வு, சுவர்களில் முறிவு, தரையில் பிளவு, நீர் கசியல், ஈரப்பதம் அதிகரிப்பு, அமைப்புச் சீர்மையின்மை என, இவை அனைத்தும் வீட்டின் நீடித்த தன்மையையும், பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும்.
எனவே, மண் பரிசோதனை மிக அவசியமான ஒரு முதல்படி. அடித்தளம் என்பது கட்டடத்தின் முழு எடையையும் மண்ணில் சமமாகப் பகிர்ந்து வைக்கும் ஆதார தளம். இது கட்டடத்தை சாய்வு, முறிவு மற்றும் தாழ்வு போன்ற சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது.
அடித்தளம் என்பது கட்டடத்தின் வலிமையும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தும் அடிப்படை. அடித்தளத்தை பொறுத்தவரை, ஐசலேட்டெட் பூட்டிங், கம்பைண்டு பூட்டிங், ரேப்ட் பவுண்டேசன், பைல் பவுண்டேசன் என, ஐந்து வகைகளில் உள்ளன. இவற்றை பொறியாளரின் பரிந்துரை அடிப்படையில், தேர்வு செய்ய வேண்டும்.
மண் பரிசோதனையின்றி வீடு கட்டினால், சில வீடுகளில் ஆறு மாதத்தில்தான் பாதிப்பு தெரியும். சில நேரங்களில், 3-5 ஆண்டுகள் கழித்தும் சுவர்களில் முறிவு, தரையில் செங்குத்தான பிசைவு, நீர் கசிவு தென்படும்.
சிலர் மேஸ்திரியை கொண்டு வீடு கட்டுகின்றனர். ஆனால், ஐ.எஸ்., கோடு பின்பற்றி, மண் பொருந்தும் தன்மை மதிப்பீடு செய்து, கட்டமைப்பு நிலைத்தன்மை ஆகிய அனைத்திலும் தகுதி பெற்ற கட்டட பொறியாளர் கொண்டுதான் வீடு கட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.