மெர்சிடிஸ் 'ஏ.எம்.ஜி., சி.எல்.இ., - 53' 4.2 வினாடியில் 100 கி.மீ., வேகம்
மெர்சிடிஸ் 'ஏ.எம்.ஜி., சி.எல்.இ., - 53' 4.2 வினாடியில் 100 கி.மீ., வேகம்
UPDATED : ஆக 20, 2025 08:05 AM
ADDED : ஆக 20, 2025 07:56 AM

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் 'ஏ.எம்.ஜி., சி.எல்.இ., - 53' ஸ்போர்ட்ஸ் கூபே மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இது, இந்தியாவில் 10வது 'ஏ.எம்.ஜி.,' மாடல் காராகும். இங்கு இறக்குமதி முறையில் விற்பனையாகிறது.
இந்த காரின் சிறப்பம்சமே, இதில் வழங்கப் பட்டுள்ள இன்ஜின் தான். அதாவது இதில், 3 லிட்டர், இன்லைன் 6 - சிலிண்டர், ட்வின் டர்போ, ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது.
![]() |
வெறும் 4.2 வினாடியில், 100 கி.மீ., வேகத்தை எட்டும் திறன் இந்த காருக்கு உண்டு. இந்த இன்ஜின், 12 வினாடி வரை, 600 என்.எம்., வரையிலான 'டார்க் பூஸ்ட்' வெளிப் படுத்துகிறது. இந்த கார், 9 - ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் '4 மேட்டிக் பிளஸ்' ஆல் வீல் டிரைவ் அமைப்பில் வருகிறது.
காற்றை கிழித்து வேகமாக பயணிக்கும் வகையிலான 'ஏரோ' டிசைனில், இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புற சக்கரம், கார் திரும்புவதற்கு எளிதாக 2.5 டிகிரி வரை வளையும் தன்மை உடையது. சொகுசான மற்றும் நிலையான பயணத்துக்காக, 'எலக்ட்ரானிக் அட்ஜஸ்ட்டபில்' சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும், 20 அங்குல அலாய் சக்கரங்கள், 11.9 மற்றும் 12.3 அங்குல இரு டிஸ்ப்ளேக்கள், ஒயர்லெஸ் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள், அலங்கார விளக்குகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.