UPDATED : ஆக 20, 2025 08:05 AM
ADDED : ஆக 20, 2025 07:57 AM

'கிளாசிக் லெஜெ ன்ட்ஸ் மோட்டார் சைக் கிள்ஸ்' நிறுவனம், அதன் 'யெஸ்டி ரோட்ஸ்டர்' பைக்கை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது.
ஹெட்லைட் மற்றும் இண்டிகேட்டர் வடிவமைப்பு, ஸ்பிலிட் சீட்கள், பின்புற நம்பர் பிளேட் அமைப்பு, பின்புற பென்டர் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் மாற்றம் உள்ளன. தொலைதுார பயணம் மேற்கொள்ள, 20க்கும் அதிகமான பைக் இணைப்புகள் வழங்கப் படுகின்றன.
![]() |
'யெஸ்டி அட்வெஞ்சர்' பைக்கில் வரும் அதே மேம்படுத்தப்பட்ட, 'ஆல்பா - 2', 334 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜினில், இந்த பைக் வருகிறது. இன்ஜினின் உட்புற உதிரிபாகங்கள், எக்ஸாஸ்ட் மற்றும் இன்லெட் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த வேகத்தில், எளிதாக பயணிக்க, பின்புற ஸ்பிராகெட் சங்கிலியில், இரு கூடுதல் பற்ககள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. 'ஸ்டாண்டர்ட்' மற்றும் 'பிரீமியம்' என இரு மாடல்களில் வரும் இந்த பைக், மொத்தம், 4 நிறங்களில் கிடைக்கிறது.