PUBLISHED ON : ஆக 24, 2025

ஜனநாயகனாக... ஜான் ஆபிரகாம்!
'இஸ்ரேல் - ஈரான்' சண்டையில் இருதரப்பு அதிகாரிகள் கொலையாகின்றனர். டில்லியில் இஸ்ரேல் துாதரக அதிகாரி மீதான ஈரானின் தாக்குதலில் ஓர் இந்திய சிறுமியும் பலியாகி றாள். ஈரானுடன் எரிவாயு ஒப்பந்தத்தை நிறை வேற்றும் அவசியத்தில் சிறுமி மரணத்தை பெரிதாக்க மறுக்கிறது வெளியுறவுத்துறை. ஆனால், இதை காவல் அதிகாரி ராஜிவ்குமார் கைவிடுவதாக இல்லை!
'சிலநேரங்களில் அரசின் ராஜதந்திர நட வடிக் கைகளுக்காக அப்பாவி மக்களின் உயிர் கள் விலையாகின்றன' எனும் அதிர்ச்சி உண்மையே இக் கதையின் மையம். 'சர் வதேச உறவுகளுக் காக அதிகாரிகள் ஆடும் சதுரங்க ஆட்டம்' இதில் வெளிப்படையாக விமர்சிக்கப்பட்டு இருக்கிறது.
சிறுமி இறக்க காரணமான மூன்று ஈரான் பயங்கரவா தி களை வேட்டையாட கிளம்பும் ராஜிவ் குமாரை ஒருகட்டத்தில் இந்திய அதிகாரி கள் கைகழுவும் சூழலில், 'அரசுகளுக்கு இடை யி லான சண்டையில் அதிகார தரப் பில் ஏற்படும் உயிரிழப்பும், பொது மக் களின் உயிரிழப்பும் ஒன்றல்ல' என அவர் விளக்குமிடம் சிறப்பு!
'மக்களை நேசிப்பதுதான் தேசபக்தி' என்ற புரிதலுடன் திரைக்கதை இருப்பதால் எந்த உணர்வும் வலிந்து திணிக்கப் படாமல் இருக்கிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பட மாக் கப்பட்டிருக் கும் 'கார் சேஸிங்' காட்சிகளில் உச்சகட்ட பரபரப்பு!
'அது நல்ல நாடு; இது கெட்ட நாடு' எனும் 'லாலிபாப்' கதையாக அல்லாமல், வெளி யுறவுத்துறை, உளவுத் துறை மற்றும் சர்வதேச ஒப்பந்த அரசி யல் மட்டத்தில், துரும் பென நினைக் கப் படும் மக்களைப் பற்றிய கதை யாக சொல்லியிருக்கும் இயக் குனர் அருண் கோபாலனுக்கு பாராட்டுகள்.
ஆக...
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்பதை அழுத்தமாக உணர்த்தும் அதிரடி படைப்பு!