
செய்தி: கழிவுநீர் அடைப்பு நீக்கும் போது மூச்சுத்திணறி உயிரிழந்த பேரூ ராட்சி துாய்மை பணியாளர்!
அநீதி: உரிய நிவாரணம், பணிக்கால பலன்கள் வேண்டி ஒன்றரை ஆண்டுகளாக தவிக்கும் குடும்பம்!
அரசே... நான் பூமாரி. ராமநாத புரம், திருவா டானை, தொண்டி முதல் நிலை பேரூராட்சி நிரந்தர துாய்மை பணி யாளராக 25 ஆண்டு கள் பணியாற்றியவர் என் கணவர் சின்ன முத்து. மார்ச் 9, 2024 இரவு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட நேரு தெருவில் பணியில் இருந்தபோது மலக் குழி தொட்டிக்குள் விழுந்து இறந்து விட்டார்!
தொண்டி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை - 53/2024 பதிவாகி, குற்றப்பத்திரிகையும் தாக்கலாகி விட்டது. ஆனால், இன்னும் நிவாரணம் கிடைக்க வில்லை. இறுதிச்சடங்கிற்காக ரூ.25 ஆயிரம் நிதி வழங்கிய பேரூராட்சி நிர்வாகம் பணிக்கால பலன்களை வழங்கவில்லை!
'டாக்டர்.பல்ராம் சிங் வெஸ் யுனியன் ஆப் இந்தியா, ரிட்பெட்டிஷன் (சிவில்) எண்: 324/2020, அக்டோபர் 20, 2023' வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 'ரூ.30 லட்சம் நிவாரணம்; வன்கொடுமை தடுப்பு திருத்த விதிகள் 2018, 2016 விதி 12(4)ன்படி மறுவாழ்வு உதவியாக அரசுப் பணி, மாதாந்திர ஓய்வூதியம், வீட்டு மனை' எல்லாம் வழங்கியாக வேண்டும் தானே; மனு கொடுத்து கொடுத்து நான் ஓய்ந்து விட்டேன்.
மலக்குழி மரணங்களுக்கு நீதி வழங் காமல் தாமதிப்பது 'திராவிட மாடல்' பெருமைகளில் ஒன்றா அரசே?