
விளையாட்டு சார்ந்த தயாரிப்புகள் மூலம் குழந்தைகளிடம் இந்திய கலாசாரம், தத்துவத்தை எடுத்துச் சென்று, அவர்க ளின் சிந்தனை ஆற்றலை வளர்த்தெடுப் பதை அடிப்படையாகக் கொண்டது இந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்.
இந்த வார மனம்கொத்தி: சரண்யா குமார்
அடையாளம்: ' சித்தம்'
இருப்பிடம்: சென்னை
இதிகாச கதைகள், கதாபாத்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் இந்தியா குறித்த தகவல்களைக் கொண்டு 17 விதமான 'கார்டு' மற்றும் 'போர்டு' வகை விளை யாட்டுகளை உருவாக்கி இருக்கிறார், அமெரிக்காவில் முதுநிலை பொறியியல் பயின்ற, 'சித்தம்' நிறுவனர் சரண்யா குமார்.
உங்களோட தயாரிப்புகளை பற்றி சொல்லுங்க சரண்யா...
'குழந்தைகளோட கவனத்தை ஒரு முகப் படுத்துற எங்க 'மந்திரம்' கார்டு விளை யாட்டை, குழந்தைகளோட சேர்ந்து விளையாட நிறைய பெற்றோர் விரும்புறாங்க. தலைமுறை இடைவெளி பிரச்னைகள் அழுத்துற இன்றைய சூழல்ல, இந்த விளையாட்டுதான் எங்களோட பெஸ்ட் செல்லர்!
'இந்தியாவின் பன்முகத்தன்மையை உணர பாரத விலாஸ், புத்திக்கூர் மை க்கு உதவுற நாரதா 007, சுயமாக முடிவெடுக்கும் திறன் வளர்க்குற சுப்ர பாதம் னு எங்க தயாரிப்பு விளையாட்டு களோட நோக்கமே... குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்குறது தான்! திறமையான எழுத்தாளர் கள், ஆராய்ச்சியாளர்கள் உதவி யோட, 2 - 16 வயது வரைக்குமான குழந்தைகளுக்கு விளையாட்டுகளை வடிவமைச்சிருக்கோம்!'
சந்தை சவால்
'நம்ம குழந்தைகள் மேற்கத்திய பாணி 'மொபைல் கேம்'களை அதிகம் விரும்புறதால, 'சித்தம்' விளையாட்டுகளை அவ்வளவு சுலபமா அவங்ககிட்டே கொண்டு போக முடியலை. '300 ரூபாய்'ங்கிற ஆரம்ப விலை அவங்களை நெருங்க உதவியா இருந்தது! இந்தியா முழுக்க நடக்குற கண்காட்சி களும் சமூக வலைத்தள விளம்ப ரங்களும்தான் எங்களுக்கான சந்தைகள்!
'சித்தம் விளையாட்டை விளை யாடுற குழந்தைகள் ஒருமாதம் கழிச்சு என்னமாதிரி உணர்றாங் கன்னு தொடர்ச்சியா தெரிஞ்சுக் கிறேன். இந்த இரண்டரை ஆண்டு கள்ல 5,000க்கும் அதிகமா 'ஆன்லைன்' வாடிக்கையாளர்கள் கிடைச்சிருக்காங்க! அருணாச்சல பிரதேசத்துல 30 பள்ளிகள், ஹிமாச் சல பிரதேசத்துல ஒரு கிராமப்புற பள்ளின்னு எங்க தயாரிப்புகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைச்சிருக்கு!'
அங்கீகாரங்கள்
'பெண்களுக்கான 'ஹெர் ஸ்டார்ட் அப்'ங்கிற நிகழ்ச்சியில '10 லட்சம் ரூபாய்' பரிசு கிடைச் சது. டில்லி 'ஸ்டார்ட் அப் மஹாரதி' போட்டி யில 'கேமிங் அண்ட் ஸ்போர்ட்ஸ்' பிரிவுல வெற்றி கிடைச்சதுல ரொம்பவே சந்தோஷம்.
மனதில் இருந்து...
'வெற்றிக்காக புள்ளிகளை சேகரிச்சுக்கிட்டே இந்தியா பற்றி தெரிஞ்சுக்க வாய்ப்பு தர்றதால 'சித்தம் கேம்ஸ்' சலிப்பு தரவே தராது!'
- எம்.எஸ்.த்ரித்தி, 15 வயது மாணவி.