
தேர்தல் நெருங்கும் சூழலில் மக்களை நினைக்கும் அரசியல்வாதி; தன் திரைப்படம் வெளியாகும் வேளை யில் மக்கள் நலன் பேசும் நடிகர்; சென்னை, ஏ.எம்.ஜெயின் கல்லுாரி 'விஸ்காம்' மாணவர்கள் கொண்டாடும் நபர் யார்?
'அப்போது நான் 7ம் வகுப்பு மாணவன். 'பறவைகளின் பசி யாற்றுவதில் எனக்கு மன நிறைவு' என்றார் அண்டை வீட்டுக்காரர் சேகர். இன்றும் அவர் துாவும் இரைக்காக மொட்டை மாடி முழுக்க கிளிக் கூட்டம். அவை ருசித்து பசியாறுவதை இவர் அப்படி ரசிக்கிறார். 'வாழ்வில் எது சந்தோ ஷம்' என வாழ்ந்து உணர்த்தும் இவர் என் ஆச்சரியம்!'
- த.ஆகாஷ் கோபி, பி.எஸ்சி.,
'இளம் வயதில் குடும்ப பொறுப்புகள் சுமந்தபடியே தன் கனவையும் கைப்பற்றி, 2021ல் 'ஆப்ரிக்க கோப்பை'யை முதன்முதலாக 'செனகல்' அணி வசமாக்கிய கால்பந்து வீரர் சாடியோ ம னே; பிறந்த ஊரின் வளர்ச்சிக்கு பில்லி யனில் நன்கொடை தந்து, தனது மக்களின் வாழ் க்கை தரம் உயர்த்தி தன் வெற்றிக்கு பெருமை சேர்த்தவர்; இவரே என் குரு!'
- சே.சாமுவேல், எம்.எஸ்சி.,
'சார்ந்திருந்தது இங்கி லாந்து அரச பரம்பரை என் றாலும், 'எய்ட்ஸ்' நோயாளி களோடு அன்பு பாராட்டிய விதம், அன்னைதெரசாவை நேசித்தவிதம், இவற்றால் தன் இறுதிச் சடங்கை கண்ணீர் கடலில் குளிப்பாட்டிய டயானா; காலன் கொண்ட பின்னும் எனக்குள் இளவ ரசியாய் வாழும் டயானாவின் துாய உள்ளத்தை கொண்டாடுகிறேன்!'
- ரா.ப்ரஷிதா, பி.எஸ்சி.,