
தங்கள் வெற்றிக்கு காரணமாய் சாதனையாளர்கள் கைகாட்டும் இடத் தில் நிற்கும் மதிப்பிற்குரிய ஆசிரி யர்களிடம், தமிழகம் கேட்க விரும்பும் பல கேள்விகளில் சில...
1. 'தலைவா... தலைவா...' என திரையரங்க வாசலில் ஊளையிட்டும் சண்டையிட்டும் பெருமையாய் பேட்டி தரும் இளைஞனது சீரழிவிற்கு, அவனது மாதா, பிதா மட்டும் தான் காரணம்' என்று நீங்களும் நம்புகிறீர் களா டீச்சர்?
2. ஐந்தாம் வகுப்பு தாண்டாதவனும், 10ம் வகுப்பு கடந்தவனும், பிளஸ் 2 முடித் தவனும், பட்டம் பெற்றவனும், தகுதியுள்ள தலைவனை கண்டறிவதில் தோல்வியுறுகி றானே... நம் கல்வி என்னதான் கற்றுக் கொடுக்கிறது டீச்சர்?
3. 'நண்பனில் ஏது நல்ல நண்பன், கெட்ட நண்பன்; நண்பன் என்றாலே நல்லவன்தான்' என்றதும் உங்களுக்கு கைதட்டத் தோன்றுகிறது எனில், 'ஆசிரியர்களில் இவர் நல்லாசிரியர்' எனும் அடையாளம் அவசியமா டீச்சர்?
4. 'குற்றவாளியின் தாய் - தந்தை பெயர், சார்ந் தி ருக்கும் கட்சியின் பெயர் வெளி வருகிறதே தவிர, அவன் கல்வி பயின்ற இடம், பயிற்றுவித்த ஆசிரியர் பெயர் ஏன் வெளியா வதில்லை' என எப்போ தேனும் சிந்தித்ததுண்டா டீச்சர்?
5. பல குற்றங்களை தடுக்க இயலாத காவல்துறை யைப் போல, 'ஆசிரியர்' போர் வை யில் சிலர் நிகழ்த்தும் பாலியல் குற்றங்களை பல ஆசிரியர்களால் ஏன் தடுக்க முடிவ தில்லை; கண்டறிவதில் சிரமமா... வெளிச் சொல்ல அச்சமா டீச்சர்?
6. 'தமிழகத்திற்கு என அறிவு முகம் இருக்கிறது' என்கிறார் நம் முதல்வர்; இதனுடன், 'டாஸ்மாக்'கின் நீண்ட வரிசையையும், வரு மானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொதுஅறிவு நம் மாணவ சமுதாயத் திற்கு உண்டா டீச்சர்?
7. 'முகமது அலி ஜின்னா, காங்கி ரஸ் தலைமை, மவுன்ட் பேட்டன் பிரபு மூவரும் பிரிவினையின் குற்றவாளிகள்' என்கிறது தேசி ய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்; இதுதொடர்பாய் உங்கள் கருத்து என்ன டீச்சர்?
7½ தங்கள் நினைவில் இருக்கும் 'மாணவர் நலனுக்கான ஆசி ரியர் போராட்டம்' எது டீச்சர்?