PUBLISHED ON : ஆக 17, 2025

டொனால்ட் டிரம்ப் அவர்களே... எங்கள் ரசனை மீதான இந்த போரை உம்மால் நிறுத்த முடியுமா?
எதிரிகளை நெருங்க தேசத்துரோகி போர்வை போர்த்திக் கொண்ட 'ரா' உளவாளி கபீர்; கபீரை சுட்டுத்தள்ளும் வெறியில் உள்ள 'ரா' உளவாளி விக்ரம். பெரும் முதலாளிகளின் கூட்டமைப்பு இந்தியாவில் நிழல் அரசு ஒன்றை நிறுவ சதி செய்கிறது. தங்களது 'ஆடு - புலி' ஆட்டம் மூலம் கபீர், விக்ரம் என்ன செய்கின்றனர்?
இப்படி கதை என்று ஒன்று இருப்பதாலேயே தராசு முள்ளை கூலி பக்கம் சாயாமல் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது வார் 2. 'கறித் துண்டு போட்டு ஓநாய் வளர்க்கும் வில்லன், ஓநாயை தனக்கு வாலாட்ட வைக்கும் நாயகன்' என சிறுபிள்ளைத்தனமான 'பில்டப்' காட்சி களில், லோகேஷூக்கு சவால் விட்டிருக்கிறார் இயக்குனர் அயன் முகர்ஜி.
கபீரும், விக்ரமும் ஸ்பெயின், ஜப்பான், சுவிட்சர்லாந்து என நாடு நாடாக சுற்றுகின்றனர். செல்லும் இடங்களில் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டுவது, தார் சாலையில் படகு விடுவது, பறக்கும் விமானத்தின் மேல் நின்று சண்டை செய்வது என இவர்களின் குரங்கு வித்தைகள் எல்லை மீறுகின்றன. நட்பு, காதல் என காட்சிகள் எது சார்ந்ததாக இருப்பினும், இறுதியில் அது 'தேச பக்தி' மரத்தில் கட்டப்படுகிறது.
'கதையில் என்ன புதுமை சேர்க்க லாம், கதைக்கருவாக எந்த விஷயத்தை மையப்படுத்தலாம், கதாபாத்திரங் களை எப்படி வடிவமைக்கலாம்' என்பதற்கு உழைக்காமல், 'எப்படி உருளலாம், எப்படி குதிக்கலாம்' என்றே தீவிரமாய் சிந்தித்திருக் கின் றனர். மசாலா திரைப்பட பிரியர் களுக்கு ஜூனியர் என்.டி.ஆரின் வில்லத்தனம் கொஞ்சம் தீனி போடும்!
'படம் பார்த்தால்தான் சாப்பிட்டது செரிமானம் ஆகும்' என்பவர்கள் இந்த அக்கப் போரில் தாராளமாக பங்கேற்கலாம். 'காசு பணம் துட்டு மணி...' மீது அக்கறை உள்ளவர்கள் ஓய்வு எடுப்பது நலம்.
இரண்டு 'ரா' உளவாளிகளின் 'ரா'வான அக்கப்போர்!