நாங்க என்ன சொல்றோம்னா...: வியஸனஸமேதம் பெந்துமித்ராதிகள் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: வியஸனஸமேதம் பெந்துமித்ராதிகள் (மலையாளம்)
PUBLISHED ON : ஆக 24, 2025

'நிலாச்சோறு' சாப்பிடலாமா?
சோறு பிசையுற பாட்டிக்கு விடிஞ்சா மரணம்; அறியாத பாட்டி பேத்தி கூட சிரிச்சு பேசிட்டிருக்கு! அந்த பேத்திக்கு வார கடைசியில நிச்சயதார்த் தம். அடுத்த அறையில பாட்டி யோட மகளும், மருமகனும் துாங்கிட்டு இருக்க, திடீர்னு ஒரு சத்தம். ஓடி வந்து பார்க்குற மருமகனுக்கு முதல்ல அதிர்ச்சி... அதுக்கப்புறம் நிம்மதி!
அந்த அதிர்ச்சிக்கான காரணம் இருக்குதே... அது, பாட்டிக்கு கொள்ளி போடுற வரைக்கும் அந்த துக்க வீட்டுல சுத்திக் கிட்டே இருக்குற மாதிரி திரைக்கதை. ஒரு ராத்திரி, ஒரு பகல்... அவ்வளவுதான்... கதை முடிஞ்சு கொள்ளி வைச்சாச்சு; வைச்சது யாரு? - இது, 'நிலாச்சோறு'க்கான சாம்பார்!
'நிலா' மாதிரி பேத்தி; பாட்டியோட மரணத் துக்கு அழுது அழுது மூக்கு சிவந்து, கிளி மூக்கு சாயல்ல ஜொலிக்கிற அந்த அழகி, தன் பாட் டிக்கு காரியம் பண்ணலை. ஆனா, நடக்கவிருந்த தன் நிச்சயதார்த்தத்துக்கு காரியம் பண்ணிடுறா; அது எப்படி? - இது, 'நிலாச் சோறு'க்கான கூட்டு!
' வீட்டோட மாப் பிள்ளையா இருக்குறோமே'ன்னு தகப் பனுக்கு வருத்தம்; கூடவே, ' மகளுக்கு நிச்சயதார்த்தம் வைச்சிருக்கோம்; ஊரை அனுசரிச்சு போகணுமே'ங் கிற பொறுப்பு; துக்க வீட்டுல எல்லாத்துக்கும் வளைஞ்சு கொடுத்து போற மனுஷன், தன்னை ஊரும் உறவும் சேர்ந்து ஒடிக்க துணிஞ்ச சூழல்ல, படார்ர்...னு நிமிர்ந்து நிற்கிற மாதிரி ஒரு திருப்பம்! - இது, 'நிலாச் சோறு'க்கான ஊறுகாய்.
'அய்யய்யே... பாட்டி, சாம்பார், ஊறுகாய்னு என்னய்யா இது; கூலி மாதிரி பிரியாணி ஏதும் இல்லையா'ன்னு கேட்குறவனுக்கு இது மொக்கை படம். 'நிலாச்சோறுக்கு எதுக்குய்யா நிலா... நேசிக்கிறவங்க நெருக்கமா உட்கார்ந்து 'பழைய சோறு' உருட்டிக் கொடுத்தா போதாதா'- இப்படி கேட்கிறவனுக்கு, சுமாரான 'சிறுகதை' வாசிச்ச திருப்தி உறுதி.
ஆக...
கடவுளின் தேசம் இப்போது தந்திருப்பது வைரக்கல் அல்ல... குட்டியூண்டு கூழாங்கல்!