sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

நாங்க என்ன சொல்றோம்னா...: சயாரா (ஹிந்தி)

/

நாங்க என்ன சொல்றோம்னா...: சயாரா (ஹிந்தி)

நாங்க என்ன சொல்றோம்னா...: சயாரா (ஹிந்தி)

நாங்க என்ன சொல்றோம்னா...: சயாரா (ஹிந்தி)


PUBLISHED ON : ஆக 10, 2025

Google News

PUBLISHED ON : ஆக 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதல் மீது நல்ல அபிப்ராயத்தை வளர்க்கும் கதை!

கிரிஷ் கபூர் - அங்கீகாரம் கிடைக்காத சுயாதீன பாடகன்; ரசிகர்கள் தன்னை ஈக்களாக மொய்ப்பதில் பிறவிப்பயன் காண்பவன்; வாணி பத்ராவை காதலித்து தன்னை அறிந்து கொள்பவன்!

வாணி பத்ரா - காதலனால் மணல் மணலாய் மனம் உடைந்தவள்; உணர்வுகளை பிசைந்து கவிதை எழுதத் தெரிந்தவள்; கிரிஷ் கபூரின் பிறவிப்பயனை மாற்றுபவள்; கிரிஷையும், நம்மையும் அழ வைப்பவள்!

தன் பிறவிப்பயனை கிரிஷ் மாற்றிக் கொள்வது ஏன்; வாணிக்காக நாம் கண்ணீர் சிந்துவது ஏன்; இவற்றிற்கான விடையாக கதை அமைந்துள் ளது. காதலை நீச்சல் குளமாக கருதுவோருக்கு இக்கதை ஒன்றுமில்லை; கடலென உணர்ந்த வர்கள் இதில் முத்து குளிக்கலாம்!

தன்னிடம் 'ஐ லவ் யூ மகேஷ்' என்று சொல்லும் வாணியின் நெற்றியில் முத்தமிடும் கிரிஷைப் போல் காதல் மனம் கொண்ட ஆணுக்கும், 'காதலின் பெயரால் நான் செய்த தவறை நீயும் செய்யாதே' என்று கிரிஷிடம் சொல்லும் வாணிக்கு நிகரான பெண் ணுக்கும், 'நாம் சிறந்தவர்கள்' என்கிற கவுரவத்தை இயக்குனர் மோகித் சூரி வழங்குகிறார்.

காதலின் தாங்குதிறனை சோதிக்கும் கண்ணீர், பிரிவு, வலி உள்ளிட்ட உணர்வுகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது திரைக்கதை. அடுத் தடுத்து நிகழும் சம்பவங்களால் இந்த காதல் நதி எங்கேயும் தேங்கவில்லை. அறிமுகப்படத்தி லே யே 'அஹான் பாண்டே - அனீட் பதா'வுக்கு, 'கிரிஷ் - வாணி' எனும் அடையாளம் கிடைத்திருக்கிறது.

ஆர்வக்கோளாறான செயல்க ளுக்கு 'காதல்' எனப் பெயரிடும் கதைகளுடன் ஒப்பிட்டால், இது ' பூமர் அங்கிள் ' கதைதான்; ஆனால், 'பயணிப்பவரின் மனவுறுதியை உரசிப் பார்க்கும் கரடுமுரடான பாதை போலத்தான் காதலும்' என்று சொல்லும் கதை இது.

ஆக...

காதலுக்கு எதிராக அரிவாள் துாக்கும் கல் மனங்களில் இப்படம் எறும்பாக ஊரட்டும்!






      Dinamalar
      Follow us