PUBLISHED ON : ஆக 10, 2025

நிகழாத கொலை... குற்றவாளி ஆகும் நிரபராதி!
பாதிரியாருடன் பணம் மணக்கும் சமரசம், மனநல நோயாளி மீட்பு, காதலர் க ளுக்கு அடைக்கலம், அதிகாரத் திமிர் கொண்ட வீட்டில் அவமானம், நடைபாதைவாசி களின் வாழ்க்கை அறியும் பாடம், பதவியை ஓரமாக்கி நிரூபிக்கும் அன்பு, மனைவி க்கு தாயாகி நிற்கும் பாசம்... இவை நிகழும் எல்லா களங் களுக்கும் ஓர் இரவுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது காவல் ரோந்து வாகனம்!
வாகனத்தில்... அதிகாரியாய் திலீஷ் போத்தன்; ஓட்டுனராய் ரோஷன் மேத்யூ.
மனதிற்கு நெருக்கமாகி விட்ட அதிகாரி யோடு சமமாய் அமர்ந்து மது அருந்துகை யில் இன்னொரு அதிகாரி வந்துவிட, 'எழுந் திருப்பதா... வேண்டாமா...' என்று தடுமாறி, பின் முடிவெடுத்து, 'எழுந்து நின்றது உடை சரி செய்யத்தான்' என்பதாக பெல்ட்டை தடவி தன்மானம் உயர்த்திக் கொள்ளும் போது, ரோஷன் மேத்யூவின் நடிப்பில்... பூ தொடுக்கும் பெண்ணின் விரல் மணம்!
சாலையை குளிப் பாட்டி தேங்கி நிற்கும் ரத்தத்தை துடைப்பத் தால் துடைத்து விடும் காட்சியோடு துவங் கும் திரைக்கதையின் முடிவு, 'அது இவரு டைய ரத்தம்' என்று உணர்த்துகையில், 'ச்சே... எவ்வளவோ புலனாய்வு கதைகள் படித்திருந்தும், திரைப்படங்கள் பார்த்தி ருந்தும் கொஞ்சம்கூட இப்படி யோசிக் காமல் விட்டுவிட்டோமே' என்று வெம்பிப் போகிறது மனம்!
விறுவிறுவென எழுதி இயக்கியிருக்கும் ஷாஹி கபிர், 'பின்னால் வந்து கொண்டி ருக்கிறேன் பார்' என்று இயக்குனர் ஜீத்து ஜோசப்பிற்கு நெருக்கமாய் வந்து ' ஹார்ன்' அடித்திருக் கிறார்!
'மதியா... விதியா' - வாழ்வின் அடுத் தடுத்த திருப்பங்களுக்கு எது காரணம்' என்று சிந்திக்கத் துாண்டும் க்ளைமாக்ஸ்; 'இது தான் கதை' எனச் சொல்லிவிட் டால் இச்சிந்தனை தடைபடும் என்பதால்... முற்றும்.
ஆக....
தாமதமாய் இதை கொண்டாடுவதில், ஊசிப்போன உணர்வில் கூசி நிற்கிறது அவியல்!