PUBLISHED ON : ஆக 10, 2025

'நம்ம ஸ்கூல்லேயே ஹாஸ்டல் வசதி இருக்குதேங்க!'
அடுத்தடுத்த ஆண்டுகளில் பெற்றோரை இழந்து ஊர்விட்டு கிளம்பத் தயாரான பத்தாம் வகுப்பு மாணவனின் உறவினரிடம் இப்படி அக்கறை காட்டுகிறார் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர். 'எந்த சூழ லிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது' என்பது பள்ளியின் நோக்கம்!
பள்ளி: துாத்துக்குடி மாவட்டம் கழுகு மலையின் சுற்றுவட்டார 30 கிராமங்களுக் குமான ஒரே அரசு மேல்நிலைப் பள்ளி இது. திறன்மிக்க ஆசிரியர்களால் கல்வியோடு கலைகள், விளையாட்டுகளிலும் மாணவர் கள் மிளிர்கின்றனர். ஊர் நடத்தும் 'தை பொங்கல் விழா'வில் ஏழு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்களே சாம்பியன்!
பெருமை: 'ஆங்கில பேச்சுப் போட்டி கள்ல கலந்துக்கிற அளவுக்கு என்னோட திறன் வளர்ந்ததுக்கு என் பள்ளிதான் காரணம். 'தேசிய வருவாய் வழி திறன் படிப்பு திட்ட உதவித்தொகை' வாங்குற நான், 'ஊரகத்திறன் தேடல் தேர்வு'லேயும் தேர்ச்சி அடைஞ்சிருக்கேன்; இதுக்கு முக்கிய காரணம், என் பள்ளி தந்த சிறப்பு பயிற்சி!'
- பிளஸ் 1 மாணவி பிருந்தாகலை.
கோரிக்கை: 'பவள விழா பார்த்தாச்சு! பிளஸ் 1, பிளஸ் 2 அறிமுகமான 1978ம் ஆண்டுல இருந்து இது மேல் நிலைப் பள்ளி. 840 பிள்ளை கள் படிக்கிறாங்க. 'பள்ளிக் குன்னு விளையாட்டு மைதா னம் வேணும்; கடைநிலை ஊழியர்கள் வேணும்'னு அரசுகிட்டே கோரிக்கை வைச்சு காத்திருக்கோம்!'
- தலைமை ஆசிரியை சீதா மகேஸ்வரி.