
'நம் உயிர் மீட்டுவது உறவா... அதன் உணர்வா?' - இதன் பதில் தேடும் முயற்சி இப்பகுதி!
வேலுார், பேரணாம்பட்டு வட்டத்துல, பாஸ் மார்பெண்டான்னு ஒரு மலை கிராமம். அங்கே 49 வயசுல ஒரு ராஜா. ஆமா... 'ராஜா'ங்கிறது அவர் பேரு. அவருக்கு நாலு பொண்ணுங்க. 'மயிலாடுதுறை' ராஜா தன் 16 வயசுல வீட்டை விட்டு ஓடி வந்துட்டார்!
கிடைச்ச வேலைகள் எல்லாம் பார்த்த வருக்கு, 27 வயசுல திருமணம். மனைவி பேரு ராஜலட்சுமி. 2004ல் மூத்தமகள் சத்யா பிறக்க, ஒரு வருஷம் கழிச்சு உமா, 2011ல் கவுரி, 2013ல் துர்கா!
வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்குப் போக ராஜாவோட விவசாய கூலி வருமா னம் அனுமதிக்கலை. இப்போ ஒரு ப்ளாஷ் பேக்; ஏழு வருஷத்துக்கு முன்னாடி ராஜா குடிகாரர். போதை ஏறிட்டா யார்கிட்டேயா வது சண்டை இழுத்துட்டு வந்திருவார். அப்படியொரு நாள், சத்யா பெரிய மனுஷி யான சமயம் நிதானம் தப்பி வந்திருக்கார்.
'ராஜாப்பா... உனக்கு ஆகாதவங்க இப்போ என்னை ஏதாவது பண்ண வந்தா உன்னால என்னை காப்பாத்த முடியுமா'ன்னு சத்யா கேட்டா பாரு... அவ்வளவுதான்... 'இன்னைக்கோட இந்த சனியனை தலை முழுகிடுறேன்'னு அழுதிருக்கார். இன்னைக்கு வரைக்கும் அந்த சத்தியத்தை காப்பாத்துறார்!
' இப்போ ராஜா மீண்டுட்டார்...'னு நினைக்கிறீங்க; இல்ல... இதுக்கப் புறம்தான் அவர் பெரிய பள்ளத்துல விழுந்தார்!
'வாசக்கதவு இல்லாத குடிசை யில நாலு பொம்பள புள்ளைங்க வாழ முடியுமா'ன்னு ஊர்க்கா ரங்க கேட்டதும், ராஜாவுக்கும் 'கேள்வி நியாயம்'னு தோணி யிருக்கு! 'பசுமை வீடு' திட்டத்துல அரசு கொடுத்த காசு போக, தன் வருமா னத்தை சரியா கணிக்காம, இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீட்டு வேலையை ஆரம்பிச்சிட்டார்!
'கொரோனா' ஊரடங்கு; வீடு கட்டுமான வேலைகள் எல்லாம் நின்னு போய், கடனுக்கு வட்டி எகிறிடுச்சு; சமாளிக்க முடியலை; சத்யா, உமாவை வேலைக்கு அனுப்பிட்டார்! ஒரு வருஷத்துக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேருக்கும் திருமணம் ஆயிருச்சு. பிறந்த வீட்டுல இருந்ததைவிட இன்னைக்கு அவங்க நல்லா இருக்காங்க!
இதுக்கப்புறம் ராஜா தீர்மானமா ஒரு முடிவு பண்ணினார். அது என்னன்னா...
'இனி வருமானத்தை மீறி கடன் வாங்கக் கூடாது; கவுரி, துர்கா படிப்பை நிறுத்தக் கூடாது'ன்னு தீவிரமா உழைக்க ஆரம்பிச் சிட்டார். அன்னைக்கு இருந்த எல்லா கஷ்டமும் இன்னைக்கும் அவருக்கு இருக்கு. ஆனாலும், 10ம் வகுப்பு கவுரியும், எட்டாம் வகுப்பு துர்கா வும் படிக்கிறதைப் பார்க்குறப்போ ராஜாகிட்டே நிம்மதி பெருமூச்சு!
'இது சத்யா, உமா ரெண்டு பேரோட படிப்பை கெடுத்து வேலைக்கு அனுப்பின குற்றவுணர் வோட வெளிப்பாடுதானே'ன்னு நாம சிரிச்சுக் கிட்டே கேட்டப்போ ராஜா மறுக்கலை!
ஏன்னா... அவர் அன்புள்ள அப்பா.