PUBLISHED ON : ஆக 31, 2025

அந்த கனவு மட்டும் பலித்திருந்தால் இப்படியொரு துயரம் எனக்கு நிகழ்ந்திருக்காதுதானே?
அய்யோ மன்னா... எந்த கனவைச் சொல்கிறீர்கள்; அழுகையை நிறுத்தி விட்டுச் சொல்லுங்கள்!
'அதிகாரவர்க்கத்தினரின் வாரிசுகள் பெற்றிருக்கும் கல்வியறிவும், பன்மொழிப் புலமையும் நம் வாரிசுகளுக்கு வாய்க்க வில்லையே' என்று சிந்தித்து மூளையை கசக்காமல், 'டாஸ்மாக், சினிமா, ரீல்ஸ்' என்று அங்கே எவ்வளவு மகிழ்ச்சியாக மக்கள் வாழ்கின்றனர் தெரியுமா?
ஓஹோ. .விளங்கி விட்டது மன்னா... ' தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் பா.ஜ., தற்போது 'தமிழர்' என்ற முகமூடியை அணிந்து, 'துணை ஜனாதிபதி' வேட்பாளருக்கு ஆதரவு கேட்கிறது' என்று தமிழக முதல்வர் சொன்னதும், அப்படியே கண்மூடி ஏற்றுக்கொள்ளும் மக்களில் ஒருவனாக தாங்கள் இருப்பதாய் கண்ட கனவுதானே அது?
ஆமாம் அமைச்சரே... 'தமிழர் நலன் என்ற முகமூடியை பா.ஜ., எப்போதும் அணிந் திருப்பதால்தான், தேசிய கல்விக் கொள்கை யின் பலன் தமிழக மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறது' என்ற கோணத்தில் அங்கு யாருமே சிந்திக்க வில்லை தெரியுமா?
மன்னா... இதோடு, இது 100வது முறை; மூக்கு சிந்திவிட்டு வேறு ஏதாவது சொல்லுங்கள்!
அமைச்சரே... அங்கு இது மழைக்காலம் அல்ல; ஓர் அதிகாலையில் சிறுநீர் கழிப்பது போல் வானம் சிறு நீர் ஊற்றி விட்டுப் போக, அது தேங்கியதில் மின்சாரம் பாய்ந்து ஒரு பெண் துாய்மை பணியாளர் இறந்து விடுகிறார். மின்னல் வேகத்தில் 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. 'நாளை நமக்கும் இது நிகழும்' எனும் சிந்தனை இன்றி, அக்கொடூர நிகழ்வை மிகச்சாதாரணமாக மக்கள் கடந்து செல்கின்றனர்!
புரிகிறது மன்னா... 'சிந்திக்காத வாழ்வு சிறப்பான வாழ்வு' எனச்சொல்ல வருகிறீர்கள்!
ஆம் அமைச்சரே... 'புறாவை வறுத்து தின்ன வேண்டும்' எனும் என் சிந்தனை யால்தானே, இன்று வல்லவராயன் நம் வாசலில் படையெடுத்து வந்து நிற்கிறான்!
உண்மைதான் மன்னா... சரி... சரி... அழா தீர்கள்; எனக்கும் அழுகை பீறிடுகிறது!