தசரா விளையாட்டு போட்டிகள்: யோகாவுக்கு முக்கியத்துவம்
தசரா விளையாட்டு போட்டிகள்: யோகாவுக்கு முக்கியத்துவம்
ADDED : ஆக 21, 2025 11:06 PM
மைசூரு தசராவை ஒட்டி, செப்டம்பர் 22 முதல் 25ம் தேதி வரை, மைசூரு சாமுண்டி விகார் மைதானத்தில் தசரா விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
இது தொடர்பாக, மாநில இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு துறை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
மைசூரு தசராவை ஒட்டி, செப்டம்பர் 22 முதல் 25ம் தேதி வரை மைசூரு சாமுண்டி விகார் மைதானத்தில் தசரா விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
3 பிரிவுகள் இதற்காக தாலுகா அளவிலான தசரா போட்டிகள் வரும் 25ம் தேதியும்; மாவட்ட அளவிலான போட்டிகள் செப்., 1ம் தேதியும்; டிவிஷனல் அளவிலான போட்டிகள் செப்., 10ம் தேதியும் நடக்கின்றன.
டிவிஷன ல் அளவிலான போட்டிகளுக்காக பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், கலபுரகி, மைசூரு, பெலகாவி டிவிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள தடகள வீரர்களுக்கு சம உரிமை வழங்கப்படும்.
செப்., 15ம் தேதிக்குள் விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களின் பெயர்களை, பெங்களூரில் உள்ள துறை கமிஷனருக்கு, சம்பந்தப்பட்ட துறை துணை இயக்குநர்கள், உதவி இயக்குனர்கள் அனுப்ப வேண்டும்.
அதுபோன்று, தாலுகா, மாவட்டம், டிவிஷனல் அளவிலான போட்டிகளுக்கு விதிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன.
இப்போட்டியில், பெண்கள், ஆண்களுக்கென 100, 200, 400, 800, 1,500, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயம், 400 மீட்டர், 1,600 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் நடக்கிறது.
இப்போட்டிகள் தவிர, வாலிபால், கோ கோ, கபடி, த்ரோபால், யோகாசனம், கூடைப்பந்து, மல்யுத்தம், பேட்மின்டன், லான் டென்னிஸ், நெட்பால், நீச்சல் போட்டி, டேபிள் டென்னிஸ், ஹாக்கி, கைப்பந்து, ஜுடோ, ஜிம்னாஸ்டிக், வில் அம்பு, சைக்கிளிங், பாக்சிங், வூஷு, டேக்வாண்டோ, பென்சிங், துப்பாக்கி சுடுதல் போட்டிகளும் நடத்தப்படுகிறது.
யோகா போட்டி யோகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தாலுகா, மாவட்டம், டிவிஷனல் அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தாலுகா அளவிலான யோகாவுக்கு வீரபத்ராசனம், ஜானு சிரசாசனம், ஹாலாசனம், தனுராசனம்; மாவட்ட அளவில் படா ஹாஸ்டாசனம், அகர்னா தனுராசனம், உர்த்வா தனுராசனம், அர்தா மத்யேந்திராசனம்; டிவிஷனல் அளவில் கூர்மாசனம், பாகாசனம்.
ராஜகாபோத்சனம், நடராஜாசனம்; மாநில அளவில் உர்த்வா முக பசிமோட்டாசனம், திட்டிபாசனம், சாலபா விரிசிகாசனம், பூர்ணா மட்யேந்தராசனம் போட்டிகள் நடத்தப்படும்.
தாலுகா, மாவட்ட அளவிலான போட்டியாளர்கள், ஒவ்வொரு ஆசனமும் 10 விநாடிகளும்; டிவிஷனல், மாநில அளவிலான போட்டியாளர்கள் 5 விநாடிகளும் செய்ய வேண்டும்.
தாலுகா அளவில் வெற்றி பெறுவோர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். டிவிஷனல் அளவில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது
- நமது நிருபர் -.