ADDED : ஆக 21, 2025 11:07 PM

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரை சேர்ந்தவர் சுரக் ராய், 6. சிறுவன் என குறைத்து மதிப்பிட வேண்டாம். சிறுவனின் வயதிற்கும், அவர் செய்யும் சாகசங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு சிறுவன், 'டர்ட் ரேசிங்கில்' பைக்கை ஓட்டி வித்தை காட்டுகிறார்.
துவக்கத்தில், சுரக் ராயும் மற்ற சிறுவர்கள் போல, மொபைல் போன் உபயோகிப்பதிலே மும்முரமாக இருந்தார். அந்த சமயத்தில், மொபைல் போனில் சகதியில் பைக் ஓட்டும், 'டர்ட் ரேசிங்' தொடர்பான வீடியோக்களை பார்த்து வந்தார். இது போல, தானும் செய்ய வேண்டும் என நினைத்த சிறுவன், தன் சைக்கிளில் வீலிங் செய்து வந்தா ர்.
ஆர்வம் இதை பார்த்த பெற்றோர், சிறுவனுக்கு டர்ட் ரேசிங் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டனர். அவருக்கு, சிறிய பைக்கை வாங்கி கொடுத்தனர். டர்ட் ரேசிங் பயிற்சியாளரான கிரண் பூஜாரியிடம், பயிற்சிக்காக சேர்த்து விட்டனர். அவ ரிடம் பயிற்சி பெறும் போது, சிறுவன் டர்ட் ரேசிங் மீது வைத்துள்ள ஆர்வம் வெளிப்பட்டது. பயிற்சியில் சேர்ந்த அடுத்த 30 நாட்களிலே, ரேஸ் துவங்க இருந்தது. இதற்காக, சிறுவன் சீக்கிரம் தயாராக வேண்டிய நிலை இருந்தது. சுரக் ராயோ வெறும் 20 நாட்களிலே, பைக் ஓட்டுவதற்கு கற்று கொண்டு, சேறு நிறைந்த பாதையில் சீறிப்பாய்ந்தார்.
சமூக வலைதளம் சமீபத்தில், பெல்தங்கடியில் நடந்த டர்ட் ரேசிங்கில் சிறுவன் கலந்து கொ ண்டு, பட்டையை கிளப்பினார். இதை பார்க்க ஏராளமானோர் வந்தனர். சிறுவனை உற்சாகப்படுத்தினர்.
அப்போது, பலரும் தங்கள் மொபைல் போன்களில், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதன் மூலம் சிறுவன் இணையத்தில் பிரபலம் அடைந்தார்.
தற்போது, மங்களூரில் உள்ள மிக குறைந்த வயதிலான டர்ட் ரேசராக சிறுவன் சுரக் ராய் உள்ளார். 'ஒரே நைட்டில் வேர்ல்ட் பேமஸ் ஆனேன்' என்பது போல, ஒரே ரேஸ் மூலம் சிறுவன் மங்களூரு முழுதும் பிரபலம் அடைந்து உள்ளார்.
- நமது நிருபர் -