ADDED : ஆக 28, 2025 11:12 PM

இன்றைய சிறுவர், சிறு மியர் கல்வியுடன், விளையாட்டிலும் ஆர்வம் காட்டுகின்றனர். போட்டிகளில் பங்கேற்று சாதனையும் செய்கின்றனர்.
பரிசு கோப்பைகளை வெல்கின்றனர். கிரிக்கெட், கால்பந்து, நீச்சல், கோகோ உட்பட பல விளையாட்டுகளில், சிறந்து விளங்குகின்றனர். அதே போன்று, மாணவி அனர்க்யா நீச்சலில் அசத்தி வருகிறார்.
தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகாவின், கல்லட்கா ஸ்ரீராமா வித்யா மையத்தில், 10ம் வகுப்பு படிப்பவர் அனர்க்யா, 16. இவர் சிறு வயதில் இருந்தே, நீச்சலில் திறன் பெற்றுள்ளார்.இதுவரை மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.
சமீபத்தில், மங்களூரில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. இதில், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் பங்கேற்றார். இதில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மாநில அளவிலான போட்டிகளுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரின் செயின்ட் அலாஷியஸ் நீச்சல் குளத்தில், தலைமை பயிற்சியாளர்கள் லோகராஜ் விட்லா, விநோத் ஆகியோரிடம் அனர்க்யா பயிற்சி பெற்றுள்ளார்
- நமது நிருபர் -.