ஏ.எப்.சி., ஆசியா கப் 2027 தகுதி சுற்று போட்டி கன்டீரவா மைதானத்துக்கு கைநழுவிய வாய்ப்பு
ஏ.எப்.சி., ஆசியா கப் 2027 தகுதி சுற்று போட்டி கன்டீரவா மைதானத்துக்கு கைநழுவிய வாய்ப்பு
ADDED : ஆக 28, 2025 11:14 PM

புல் மைதானம் இல்லாதது, அடிப்படை வசதி பற்றாக்குறையால், இந்தியா - சிங்கப்பூர் இடையேயான, 'ஏ.எப்.சி., ஆசிய கப் - 2027' தகுதி சுற்று போட்டியை நடத்துவதற்கான தகுதியை பெங்களூரு கன்டீரவா கால்பந்து மைதானம் இழந்துவிட்டது .
பெங்களூரில் உள்ள கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் தாலுகா, மாவட்டம், மாநிலம் அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏ.எப்.சி., எனும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும், ஏ.எப்.சி., ஆசியா கப் - 2027 தகுதி சுற்று போட்டி, அக்., 14ம் தேதி இந்தியா - சிங்கப்பூர் இடையே நடக்க உள்ளது.
இப்போட்டியை பெங்களூரில் உள்ள கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடத்த, அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சிபாரிசு செய்தது.
இம்மைதானத்தை ஆய்வு செய்ய குழுவினர் வந்தனர். அதன்பின், ஏ.சி.பி.,க்கு அளித்த அறிக்கையில், 'கன்டீரவா மைதானம் இயற்கையான ஆடுகளம் இல்லை.
மேலும், அடிப்படை வசதி கள் இல்லை. எனவே, சர்வதேச போட்டிகளை இங்கு நடத்துவதற்கு ஏற்றதல்ல' என்று தெரிவித்திருந்தது. இதனால் தகுதி சுற்று போட்டி நடத்த கோவா மற்றும் ஷில்லாங்கை, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பரிசீலித்து வருகிறது.
சமீபத்தில் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமிக்கப்பட்டார்.
இவரின் பயிற்சியில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி, இரண்டு 'டிரா' என 'சி' பிரிவில் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ள இந்திய அணி, 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூரை எதிர்கொள்ள உள்ளது
- நமது நிருபர் - .