/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
நாசிக்கில் வைகாசி விசாக பெருவிழா
/
நாசிக்கில் வைகாசி விசாக பெருவிழா

நாசிக் பஞ்சவடியில் உள்ள கார்த்திக் ஸ்வாமி கோயிலில் வைகாசி விசாக பெருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பால் குடங்கள், கோதாவரி தீர்த்தமுடன் காவடி எடுத்து வந்தனர். ருத்ர ஜபம் செய்து பாலாபிஷேகம், தீர்த்த அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் நண்பகல் 01.00 அளவில் தீபாராதனை நடைபெற்றது.
கண்கண்ட தெய்வம் நாசிக் பஞ்சவடியில் வீற்றிருக்கும் அருள்மிகு கார்த்திக் சுவாமியின் அருளைப் பெற மெய்யன்பர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆன்மிகத்தில் திளைத்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மிகச்சிறப்பான ஏற்பாடுகளை நாட்டுக்கோட்டை நகரத்தார் ஒவ்வொரு வருடமும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் செய்தியாளர் பா. ஸ்ரீதர்