/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
தினமலர் மற்றும் நாசிக் தமிழச் சங்கத்துக்கு மகாராஷ்டிர கவர்னர் வாழ்த்து

ஜூலை 03, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணனை நாசிக் தமிழ் சங்கம் தலைவர் இராமமூர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்து, நாசிக் தமிழ் மக்கள் சார்பில் பொன்னாடை, மலர் கொத்து, நினைவுப்பரிசு வழங்கினார்.
சந்திப்பின் போது தமிழ் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், வளர்ச்சி மற்றும் தமிழ் சங்கம் நலத்திட்டங்களை பற்றி விவாதிக்கப்பட்டது. நாசிக் தமிழ் சங்க நலத்திட்டங்களை பாராட்டிய ஆளுநர் , மென்மேலும் வளர்ச்சிக்கு பாராட்டும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஆதி திராவிடர் பள்ளி மாணவர்கள் கல்வி உதவிப்பணி குறித்து தமிழ் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அதற்கு தினமலர் அளித்த கல்விக்கொடையினை பற்றியும் மிகவும் ஆளுநர் பாராட்டினார். தினமலர் சார்பாகவும் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சந்திப்பின் போது சங்க பிரதிநிதிகள் ஸர்ப்ராஸ், ஸ்ரீதர் உடன் இருந்தனர்.
- நமது செய்தியாளர் பா. ஸ்ரீதர்