/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் 17வது அனுஷம் ஜெயந்தி
/
அயோத்தி ஸ்ரீ காஞ்சி மடத்தில் 17வது அனுஷம் ஜெயந்தி
ஜூன் 12, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 17-வது அனுஷம் ஜெயந்தி ஜூன் 10, 2025 அன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் மிகு விமரிசையாக நடைபெற்றது.
பாடசாலை வித்யார்த்திகள் பலர் இதில் திரளாக பங்கேற்று ஸ்ரீஸுக்தம், புருஷஸூக்தம், ஸ்ரீ ருத்ரம், நமகம், சமகம், ஸ்ரீ ராம புஜங்க பிரயாத ஸ்தோத்திரம் மற்றும் சத்குரு தக்ஷகம் பாராயணம் செய்தனர். மஹாபெரியவா மீது பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் இந்த ஸ்லோகம் எழுதப்பட்டது. தோடகாஷ்டகம் பாடி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.