/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
திருக்குறளால் வாழ்வாதாரம் - குறளங்காடி திறப்பு
/
திருக்குறளால் வாழ்வாதாரம் - குறளங்காடி திறப்பு
மே 26, 2025

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில், திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவின் போது, திருக்குறளால் வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் முதல்முறையாக குறளங்காடி அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்வின்போது, 40க்கும் மேற்பட்ட குறளங்காடி பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது, விழாவில் கலந்து கொண்டவர்களை ஈர்த்தது.
அமெரிக்காவின் லிபர்ட்டி சிலையை போன்று, தமிழகத்தின் திருவள்ளுவரையும் உலக அளவில் தெரியும் வகையில், சுற்றுலா தளங்களில் பல அரிய நினைவுப் பொருட்களைப் பெற்றுச்செல்லும் வகையில் குறளங்காடி பல பொருட்களை செய்து விற்பனை செய்யும் நோக்கில் உள்ளது.
இதன் வாயிலாக குறள் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு கடைகளிலே விற்கப்படும். சாவிக் கொத்து, காந்தங்கள், சிலைகள் போன்ற நினைவுப் பொருட்களும், பல்வேறு விதமான கைவினைப் பொருட்களும், பரிசு பொருட்களும், நாட்காட்டிகளும், திருக்குறள் சொற்கள் மற்றும் திருவள்ளுவர் உருவம் பொறித்த ஆடைகளும், பைகளும், திருக்குறள் உரைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், கதைகள் அடங்கிய நூல்களும் விற்கப்படும்.
இப் பொருட்கள் மாவட்டம் தோறும் கடைகள் அமைக்கப்பட்டு, விற்க ஏற்பாடுகள் செய்யப்படும். அடுத்த கட்டமாய், இத்தகைய பொருட்கள் வெளிநாடுகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும். இணைதளம் வாயிலாகவும் இப் பொருட்களைப் பெறலாம்.
இதன் வாயிலாக, கடைகளின் வழியாய், குறைந்தது ஒரு கடைக்கு இரண்டு பேர் வீதம் பலருக்கும், இத்தகைய கைவினைப் பொருட்களையும் பரிசுப் பொருட்களையும் செய்யும் பலருக்கும் வேலை வாய்ப்பு கிட்டும்.
இதை மக்கள் அனைவரும் பரிசு பொருட்களாகவும், நூல்களாகவும், அலுவல் பரிசு பொருட்களாகவும் வாங்கி, தமிழால் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களை இந்த முற்றோதல் இயக்கத்தின் விழாவின் போது தலைவர் ச.பார்த்தசாரதி கேட்டுக் கொண்டார். மேலும் திருக்குறளை உலக அளவில் எடுத்துச் செல்ல, முதலில் ஊர் பரவலாக்கல் அதனை அடுத்து உலகப் பரவலாக்கல் செய்ய இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் எடுத்துக் கூறினார்.
- நமது செய்தியாளர் டாக்டர் மெய்.சித்ரா